• Oct 05 2024

அம்பானி வெற்றிக்கு காரணம் இதுதான்!

crownson / Dec 29th 2022, 7:58 am
image

Advertisement

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தனது தந்தை திருபாய் அம்பானியின் மறைவிற்கு பின் ஜூலை 2002 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், ரிலையன்ஸ் நிறுவனம் பல உயரங்களை எட்டியுள்ளது.

முகேஷ் அம்பானியின் தலைமையில், ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இரட்டை இலக்க சதவீதத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

சராசரியாக வருடத்திற்கு 20.6 சதவீதம் என 2002 ஆம் ஆண்டு ரூ.41,989 கோடியாக இருந்த சந்தை மூலதனம், மார்ச் 2022யில் ரூ.17.81 லட்சம் கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமம் கடந்த 20 ஆண்டுகளில் ரூ. 17.4 லட்சம் கோடியென முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளது.

இது சராசரியாக ஆண்டிற்கு 87,000 கோடி ரூபாய் ஆகும்.

மோதிலால் ஆஸ்வாலின் 26ஆவது வருடாந்திர சொத்து மதிப்பு ஆய்வின்படி, 2016 - 2021 வரையிலான ஆண்டில் மட்டும் 10 லட்சம் கோடியாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்தி ரிலையன்ஸ் நிறுவனத்தின் முந்தைய சாதனையை ரிலையன்ஸ் குழுமமே முறியடித்துள்ளது.

ஜாம்நகரில் 2002யில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மிகப்பெரிய சுத்திகரிப்பு தொழிற்பேட்டையாக உள்ளது.

உலகில் உள்ள மற்ற சுத்திகரிப்பு நிலையங்களை விடவும், இந்த தொழிற்பேட்டை மிகவும் குறைவான மதிப்பீட்டிலேயே கட்டப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் உலகிலேயே பெரிய பெட்ரோகெமிக்கல் நிலையம் ஜாம் நகரில் தான் உள்ளது.

2021ஆம் நிதியாண்டில் மட்டும் ஜியோ, ரிலையன்ஸ் வெண்ட்யுர்ஸ் முதல் உலக சந்தை முதலீட்டாளர்கள் வரை ரூ. 2.5 லட்சம் கோடி என நிதியை திரட்டி சாதனை படைத்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

மேலும் அதே நிதியாண்டில் இந்தியாவில் வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்த்த மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இருந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வெற்றிக்கு காரணம் இதுதான் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது தந்தை திருபாய் அம்பானியின் மறைவிற்கு பின் ஜூலை 2002 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற பின், ரிலையன்ஸ் நிறுவனம் பல உயரங்களை எட்டியுள்ளது.முகேஷ் அம்பானியின் தலைமையில், ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இரட்டை இலக்க சதவீதத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக வளர்ச்சி அடைந்துள்ளது. சராசரியாக வருடத்திற்கு 20.6 சதவீதம் என 2002 ஆம் ஆண்டு ரூ.41,989 கோடியாக இருந்த சந்தை மூலதனம், மார்ச் 2022யில் ரூ.17.81 லட்சம் கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது.ரிலையன்ஸ் குழுமம் கடந்த 20 ஆண்டுகளில் ரூ. 17.4 லட்சம் கோடியென முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளது. இது சராசரியாக ஆண்டிற்கு 87,000 கோடி ரூபாய் ஆகும். மோதிலால் ஆஸ்வாலின் 26ஆவது வருடாந்திர சொத்து மதிப்பு ஆய்வின்படி, 2016 - 2021 வரையிலான ஆண்டில் மட்டும் 10 லட்சம் கோடியாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்தி ரிலையன்ஸ் நிறுவனத்தின் முந்தைய சாதனையை ரிலையன்ஸ் குழுமமே முறியடித்துள்ளது.ஜாம்நகரில் 2002யில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மிகப்பெரிய சுத்திகரிப்பு தொழிற்பேட்டையாக உள்ளது. உலகில் உள்ள மற்ற சுத்திகரிப்பு நிலையங்களை விடவும், இந்த தொழிற்பேட்டை மிகவும் குறைவான மதிப்பீட்டிலேயே கட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உலகிலேயே பெரிய பெட்ரோகெமிக்கல் நிலையம் ஜாம் நகரில் தான் உள்ளது.2021ஆம் நிதியாண்டில் மட்டும் ஜியோ, ரிலையன்ஸ் வெண்ட்யுர்ஸ் முதல் உலக சந்தை முதலீட்டாளர்கள் வரை ரூ. 2.5 லட்சம் கோடி என நிதியை திரட்டி சாதனை படைத்தது ரிலையன்ஸ் நிறுவனம். மேலும் அதே நிதியாண்டில் இந்தியாவில் வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்த்த மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இருந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement