• Jan 13 2025

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள்..!

Sharmi / Jan 11th 2025, 11:12 am
image

கொழும்பு துறைமுகத்தில் 800 முதல் 1000 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதவே இவ்வாறு கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை துறைமுக அதிகார சபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள். கொழும்பு துறைமுகத்தில் 800 முதல் 1000 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதவே இவ்வாறு கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதேவேளை துறைமுக அதிகார சபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement