• Jan 14 2025

மாவீரர்களை நினைவேந்தி பேஸ்புக்கில் பிரசாரம்- 3 இளைஞர்கள் கைது!

Tamil nila / Nov 30th 2024, 8:20 pm
image

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினத்தை ஊக்குவித்து பேஸ்புக்கில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

 அவர்களில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் உப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அதேநேரம், கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மற்றொரு இளைஞர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மாவீரர்களை நினைவேந்தி பேஸ்புக்கில் பிரசாரம்- 3 இளைஞர்கள் கைது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினத்தை ஊக்குவித்து பேஸ்புக்கில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   அவர்களில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் உப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றொரு இளைஞர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement