பஸ் டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையினால் பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச, டயர்கள் கிடைப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பஸ்களுக்கு, அரச பஸ் சாலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
பிற செய்திகள்
- வரக்காபொலயில் பொலிஸ்காரரை சரமாரியாக தாக்கிய இராணுவ அதிகாரி! (வீடியோ இணைப்பு)
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- நமது முகத்தில் உடலுறவு கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கு புதிய சிக்கல்! (படங்கள் இணைப்பு)
- துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வசதி!