• Nov 28 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!

Chithra / Nov 1st 2024, 8:29 am
image

 

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால்மூல வாக்குகளை பதிவு செய்யும் இரண்டாவது நாள் இன்றாகும்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்புக்கான முதல் நாளாக மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதன்படி, முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியாத வாக்காளர்கள், எதிர்வரும் நவம்பர் 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால்மூல வாக்களிப்பை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று  2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால்மூல வாக்குகளை பதிவு செய்யும் இரண்டாவது நாள் இன்றாகும்.கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்புக்கான முதல் நாளாக மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.இதன்படி, முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.இன்றைய தினம் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியாத வாக்காளர்கள், எதிர்வரும் நவம்பர் 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால்மூல வாக்களிப்பை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement