• Nov 24 2024

புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்! samugammedia

Tamil nila / Dec 7th 2023, 7:13 pm
image

புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

செபஸ்தியார் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதி ஊடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். 

இரணைமடு பொதுச்சந்தை, பாடசாலை மற்றும் தொழில் உள்ளிட்ட அன்றாட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு குறித்த வீதி இன்றியமையாததாக உள்ளது.



இந்த நிலையில், குறித்த பாலம் 2019ம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன், அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக ஏறத்தாழ 11 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும், இன்று அதிகாலை உடைந்து விழுந்துள்ளது.

இன்று காலை தொழிலுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாலம் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது இடம்பெற்ற இந்த சம்பவம், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் போது இடம் பெற்றிருந்தால், பாரிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

தமது வரிப்பணத்தில் பாரிய நிதியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் உடைந்தமை தொடர்பில் ஆதங்கம் வெளியிடும் மக்கள், தமது வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

உடைந்த இந்த பாலத்தை உடனடியாக கரைச்சி பிரதேச சபையினர் சீர் செய்து, நிரந்தரமான அபிவிருத்தி ஊடாக தமது போக்குவரத்து இலகுபடுத்தலை உடன் சீர்செய்து தர வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாலம் உடைந்து விழுந்த நிலையில் காணப்படுவதால், மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய அப்பாயமும், வீதி மேலும் சேதமடையும் அபாயமும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம் samugammedia புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.செபஸ்தியார் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதி ஊடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இரணைமடு பொதுச்சந்தை, பாடசாலை மற்றும் தொழில் உள்ளிட்ட அன்றாட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு குறித்த வீதி இன்றியமையாததாக உள்ளது.இந்த நிலையில், குறித்த பாலம் 2019ம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன், அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்காக ஏறத்தாழ 11 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும், இன்று அதிகாலை உடைந்து விழுந்துள்ளது.இன்று காலை தொழிலுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாலம் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது இடம்பெற்ற இந்த சம்பவம், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் போது இடம் பெற்றிருந்தால், பாரிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.தமது வரிப்பணத்தில் பாரிய நிதியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் உடைந்தமை தொடர்பில் ஆதங்கம் வெளியிடும் மக்கள், தமது வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.உடைந்த இந்த பாலத்தை உடனடியாக கரைச்சி பிரதேச சபையினர் சீர் செய்து, நிரந்தரமான அபிவிருத்தி ஊடாக தமது போக்குவரத்து இலகுபடுத்தலை உடன் சீர்செய்து தர வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பாலம் உடைந்து விழுந்த நிலையில் காணப்படுவதால், மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய அப்பாயமும், வீதி மேலும் சேதமடையும் அபாயமும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement