• Sep 08 2024

உலகளாவிய ரீதியில் குறை பிரசவங்கள் குறித்து ஐ.நா அவதானம்! samugammedia

Tamil nila / May 11th 2023, 2:34 pm
image

Advertisement

உலக சுகாதார அமைப்பு, ஐ.நா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளன.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டு 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்து ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. அதாவது 2020 இல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி. இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன.

கிரீஸ் (11.6%) மற்றும் அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது.

அத்துடன், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45% பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் போர், காலநிலை மாற்றம், கோரோனா வைரஸ் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர் ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன.

குறிப்பாக, காலநிலை மாற்றமும் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் குறை பிரசவங்கள் குறித்து ஐ.நா அவதானம் samugammedia உலக சுகாதார அமைப்பு, ஐ.நா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளன.இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டு 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்து ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. அதாவது 2020 இல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி. இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன.கிரீஸ் (11.6%) மற்றும் அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது.அத்துடன், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45% பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் போர், காலநிலை மாற்றம், கோரோனா வைரஸ் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர் ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன.குறிப்பாக, காலநிலை மாற்றமும் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement