• May 18 2024

தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 1:22 pm
image

Advertisement

தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி அபகரித்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் சென்றது என தெரிவித்தார்.


ஜனநாயகத்தை அழித்து, இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தால் நாட்டை ஆளுகின்ற ஒரு யுகத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், மக்களின் ஜனநாயகத்திற்கும், ஜனரஞ்சகத்திற்கும் தற்பொழுது பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்றும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரஞ்சித் மத்துமபண்டார இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை SamugamMedia தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி அபகரித்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் சென்றது என தெரிவித்தார்.ஜனநாயகத்தை அழித்து, இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தால் நாட்டை ஆளுகின்ற ஒரு யுகத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், மக்களின் ஜனநாயகத்திற்கும், ஜனரஞ்சகத்திற்கும் தற்பொழுது பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்றும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரஞ்சித் மத்துமபண்டார இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement