• May 18 2024

இந்திய மீனவர்களுக்கு இராணுவப்பயிற்சி: இலங்கை மீனவர்களுக்கும் பயிற்சி வேண்டும்-வலுக்கும் அழுத்தம்!SamugamMedia

Sharmi / Mar 9th 2023, 1:14 pm
image

Advertisement

சட்டவிரோத மீன்பிடி முறையினை தடைசெய்யுமாறு முல்லைத்தீவில் தாம் போராடியபோது வருகை தராத அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இன்று தேர்தல் அறிவித்தவுடன் மீனவர்களின் பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனத்தின் தலைவர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றினைந்து நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் கட்சிவேறுபாடுகள் இன்றி அமைச்சருடன் இணைந்து தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுதரமுடியும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டதால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அருள்நாதன் குறிப்பிடுகின்றார்.

இந்திய மீனவர்களுக்கு இந்திய காவல்துறையினரால் பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 20 பேரை அமைச்சிடம் கொடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு இலங்கை கடற்படையினர் பயிற்சிகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்த அருள்நாதன் இதன்மூலம் சட்டவிரோதமான தொழிலை கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.


இந்திய மீனவர்களுக்கு இராணுவப்பயிற்சி: இலங்கை மீனவர்களுக்கும் பயிற்சி வேண்டும்-வலுக்கும் அழுத்தம்SamugamMedia சட்டவிரோத மீன்பிடி முறையினை தடைசெய்யுமாறு முல்லைத்தீவில் தாம் போராடியபோது வருகை தராத அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தேர்தல் அறிவித்தவுடன் மீனவர்களின் பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனத்தின் தலைவர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றினைந்து நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறிகந்தவேல் புனிதபிரகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.வடக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் கட்சிவேறுபாடுகள் இன்றி அமைச்சருடன் இணைந்து தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுதரமுடியும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டதால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அருள்நாதன் குறிப்பிடுகின்றார்.இந்திய மீனவர்களுக்கு இந்திய காவல்துறையினரால் பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 20 பேரை அமைச்சிடம் கொடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு இலங்கை கடற்படையினர் பயிற்சிகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்த அருள்நாதன் இதன்மூலம் சட்டவிரோதமான தொழிலை கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement