வவுனியாவில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

108

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் இன்று காலை வரை, 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இம்மாதம் 24 ஆம் திகதியிலிருந்து இன்று 26 ஆம் திகதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் மட்டும் 194.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .

தற்போது தாழமுக்கம் உருவாகியதனாலே இவ் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

வடகீழ் பருவ பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

அத்துடன் இடி மின்னல் தாக்க நிலைமைகளும் காணப்படுகின்ற காரணத்தினால், பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதியை நான் உசுப்பேற்றுவதாக மைத்திரிபால பொய் சொல்கிறார்! மஹிந்தானந்த

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: