• Oct 30 2024

தீபாவளி கொண்டாட முடியாதளவுக்கு விலையேற்றத்தால் திண்டாடும் மக்கள் - அநுர அரசைச் சாடும் வேலுகுமார்

Chithra / Oct 29th 2024, 8:13 am
image

Advertisement


பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும் பாய்ந்தோடும் நாடாக இலங்கை மாறும் என்றார்கள், அப்படி பாரிய மாற்றங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின்போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர். எனவே, அஸ்வெசுமவைவிட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை.

மக்களின் வாழ்க்கைச் சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. 

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். 

ஆனால், பொருட்களின் விலைகளைப் பார்க்கும்போது, கொண்டாடுவதை விட்டுவிட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

அதேவேளை, கட்சி, தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர். 

ஆனால், பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி அநுரகுமார செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல் போயுள்ளன.

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி போகவில்லையாம். நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா? - என்று வேலுகுமார் கேள்வி எழுப்பினார்.

தீபாவளி கொண்டாட முடியாதளவுக்கு விலையேற்றத்தால் திண்டாடும் மக்கள் - அநுர அரசைச் சாடும் வேலுகுமார் பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும் பாய்ந்தோடும் நாடாக இலங்கை மாறும் என்றார்கள், அப்படி பாரிய மாற்றங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின்போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர். எனவே, அஸ்வெசுமவைவிட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை.மக்களின் வாழ்க்கைச் சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால், பொருட்களின் விலைகளைப் பார்க்கும்போது, கொண்டாடுவதை விட்டுவிட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.அதேவேளை, கட்சி, தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர். ஆனால், பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி அநுரகுமார செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல் போயுள்ளன.நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி போகவில்லையாம். நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா - என்று வேலுகுமார் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement