• Nov 17 2024

இந்தத் தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - கஜேந்திரன் தெரிவிப்பு!

Tamil nila / Aug 9th 2024, 7:36 pm
image

இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள்.

அந்தவகையில் சிவில் அமைப்புகளும், காட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற தரப்புக்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடை செய்கின்ற நோக்கத்தோடு இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியனேந்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இந்தத் தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - கஜேந்திரன் தெரிவிப்பு இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள்.அந்தவகையில் சிவில் அமைப்புகளும், காட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற தரப்புக்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடை செய்கின்ற நோக்கத்தோடு இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியனேந்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement