• May 10 2024

கோட்டாவை மக்கள் கலைத்தபோது மகிழ்ச்சியடைந்தோம்-மொட்டு எம்.பி கருத்து.! SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 10:03 am
image

Advertisement

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்று 2 வருடங்களுக்குள் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட போது எந்த கவலையும் தாம் அடையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சட்டக் கல்லூரி பரீட்சை மொழி தொடர்பான பிரச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பேற்க வேண்டும். இந்த தவறை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கள் ஏதும் நிறைவேறவில்லை.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றவில்லை. முறையற்ற வகையில் செயற்பட்டார்;. நாட்டுக்கு அழிவை மாத்திரம் மிகுதியாக்கினார்.

எனவே இரண்டரை வருட காலத்தில் மக்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகியதையிட்டு, நாங்கள் கவலையடையவில்லை எனவும் தெரிவித்தார்.

கோட்டாவை மக்கள் கலைத்தபோது மகிழ்ச்சியடைந்தோம்-மொட்டு எம்.பி கருத்து. SamugamMedia கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்று 2 வருடங்களுக்குள் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட போது எந்த கவலையும் தாம் அடையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.சட்டக் கல்லூரி பரீட்சை மொழி தொடர்பான பிரச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பேற்க வேண்டும். இந்த தவறை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கள் ஏதும் நிறைவேறவில்லை.நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றவில்லை. முறையற்ற வகையில் செயற்பட்டார்;. நாட்டுக்கு அழிவை மாத்திரம் மிகுதியாக்கினார்.எனவே இரண்டரை வருட காலத்தில் மக்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகியதையிட்டு, நாங்கள் கவலையடையவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement