சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் (27) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்து மிக விரைவில் வாக்கெடுப்புக்கு சென்றால் பாராளுமன்றத்தில் அரசாங்கம் தனது பலத்தை காட்ட முடியும். அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு சந்தர்ப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, " பேஸ்புக் ஜனாதிபதியும் வாயச்சவடால் ஜனாதிபதியுமே தற்போது வாக்களிப்பின்றி வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் ஜனாதிபதியாவார். நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
வரலாறு நெடுகிலும் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையை அடிப்படையாக கொண்டு வாக்களித்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர மகிந்தவை கொண்டு வந்தனர், அதை அவர் செய்தார். மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்யும்படி மக்கள் சொன்னார்கள் அதை அவர் செய்தார். நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே மைத்திரிபால சிறிசேன கொண்டுவரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானித்தனர்.
கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்பை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்தார்கள். இம்முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இந்த முறையை மாற்றுவதாகக் கூறி அதை நிரூபித்த தலைவர். எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் - சூளுரைக்கும் பிரசன்ன ரணதுங்க.samugammedia சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் (27) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்து மிக விரைவில் வாக்கெடுப்புக்கு சென்றால் பாராளுமன்றத்தில் அரசாங்கம் தனது பலத்தை காட்ட முடியும். அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு சந்தர்ப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, " பேஸ்புக் ஜனாதிபதியும் வாயச்சவடால் ஜனாதிபதியுமே தற்போது வாக்களிப்பின்றி வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் ஜனாதிபதியாவார். நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். வரலாறு நெடுகிலும் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையை அடிப்படையாக கொண்டு வாக்களித்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர மகிந்தவை கொண்டு வந்தனர், அதை அவர் செய்தார். மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்யும்படி மக்கள் சொன்னார்கள் அதை அவர் செய்தார். நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே மைத்திரிபால சிறிசேன கொண்டுவரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானித்தனர். கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்பை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்தார்கள். இம்முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இந்த முறையை மாற்றுவதாகக் கூறி அதை நிரூபித்த தலைவர். எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.