• May 06 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்கோம்...! யோகேஸ்வரன் திட்டவட்டம்...!

Sharmi / Apr 4th 2024, 1:52 pm
image

Advertisement

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் பறிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக மக்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம்(03)  போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், போராட்டகாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசு கட்சியைப் பொறுத்த வரையில் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள் தொடர்பில்  கூடிய கவனம் செலுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.

இலங்கையில் 22 பிரதேச செயலகங்கள்  1993ம் ஆண்டு அமைச்சரவையின் தீர்மானத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

 22 பிரதேச செயலகங்களிலும் அதிகாரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் புடுங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் இங்கு அதிகாரம் காட்டுவதற்கும் நாம் இடமளிக்க முடியாது.  இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். 

தலால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கின்ற அரசியல் தலைவர்கள் எங்களை நாடிவர இருக்கின்றார்கள். அவர்களிடமும் எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றோம்.  

சுயாதீனமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்க வேண்டும். அதிலிருக்கின்ற அதிகாரங்கள் எதுவும் புடுங்குப்படக் கூடாது. புடுங்கப்பட்ட அதிகாரங்கள் மீள அந்த பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்படல் வேண்டும். அது வர்த்தமானியில் பிரிசுரிக்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உயர் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம்.

ஏனெனில் தற்போது நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்க முடியாது இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டுமாக இருந்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்கள் பூரணமாக கொடுக்கப்பட்டு அது சுயாதீனமாக இயங்க வேண்டும். எந்த தலையீடும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் மேற்கொள்ள முடியாத நிலைமையை உருவாக்க வேண்டும். இது சாதாரணமானதொரு விடயம்.

ஆனால் இது நீண்ட காலமாக இழுபடியில் இருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே 2003ம் ஆண்டு கோரளைப்பற்று மத்தி என்ற பிரதேச செயலகம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அத்தனை அதிகாரங்களும் இருக்கின்றது. 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மட்டுமே கொண்டு சுயாதீனமாக இயங்குகின்றது.

29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சுயாதீன தன்மையை பாதிக்கும் வகையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடாத்தப்படுவதில்லை. தவிசாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில்லை.  

கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தமது அதிகாரத்தின் கீழ் அடிமையானதாக இது ஒரு உபபிரதேச செயலகம் என்ற பெயரைச் சொல்லி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் பிண்ணனியாக இருப்பவர்கள் இஸ்லாமிய அரசியல்வாதிகள். அவர்களுடைய இடங்களில் நாங்கள் புடுங்கப்போகவில்லை.

எங்கள் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்தப் பகுதியில் இதன் உரிமையை  கல்முனை தெற்கு பிரதேச செயலகம் பறிப்பதற்கு அனுமதிக்க முடியாது. 

ஆதலால் எங்களுடைய நடவடிக்கை தீவிரமாக இருக்கும். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் கூடிய கவனஞ் செலுத்துகின்றோம். தற்போதைய சூழலில் ஏற்படப்போகின்ற பேச்சுவார்த்தைகளில் எல்லாம் இதை முன்னிலைப்படுத்தி எங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். என குறிப்பிட்டார்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்கோம். யோகேஸ்வரன் திட்டவட்டம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் பறிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக மக்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்றையதினம்(03)  போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், போராட்டகாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் அரசு கட்சியைப் பொறுத்த வரையில் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள் தொடர்பில்  கூடிய கவனம் செலுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கையில் 22 பிரதேச செயலகங்கள்  1993ம் ஆண்டு அமைச்சரவையின் தீர்மானத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. 22 பிரதேச செயலகங்களிலும் அதிகாரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் புடுங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் இங்கு அதிகாரம் காட்டுவதற்கும் நாம் இடமளிக்க முடியாது.  இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதலால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கின்ற அரசியல் தலைவர்கள் எங்களை நாடிவர இருக்கின்றார்கள். அவர்களிடமும் எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றோம்.  சுயாதீனமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்க வேண்டும். அதிலிருக்கின்ற அதிகாரங்கள் எதுவும் புடுங்குப்படக் கூடாது. புடுங்கப்பட்ட அதிகாரங்கள் மீள அந்த பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்படல் வேண்டும். அது வர்த்தமானியில் பிரிசுரிக்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உயர் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். ஏனெனில் தற்போது நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்க முடியாது இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டுமாக இருந்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்கள் பூரணமாக கொடுக்கப்பட்டு அது சுயாதீனமாக இயங்க வேண்டும். எந்த தலையீடும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் மேற்கொள்ள முடியாத நிலைமையை உருவாக்க வேண்டும். இது சாதாரணமானதொரு விடயம். ஆனால் இது நீண்ட காலமாக இழுபடியில் இருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே 2003ம் ஆண்டு கோரளைப்பற்று மத்தி என்ற பிரதேச செயலகம் கொண்டுவரப்பட்டது. அதற்கு அத்தனை அதிகாரங்களும் இருக்கின்றது. 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மட்டுமே கொண்டு சுயாதீனமாக இயங்குகின்றது. 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சுயாதீன தன்மையை பாதிக்கும் வகையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடாத்தப்படுவதில்லை. தவிசாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில்லை.  கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தமது அதிகாரத்தின் கீழ் அடிமையானதாக இது ஒரு உபபிரதேச செயலகம் என்ற பெயரைச் சொல்லி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் பிண்ணனியாக இருப்பவர்கள் இஸ்லாமிய அரசியல்வாதிகள். அவர்களுடைய இடங்களில் நாங்கள் புடுங்கப்போகவில்லை.எங்கள் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்தப் பகுதியில் இதன் உரிமையை  கல்முனை தெற்கு பிரதேச செயலகம் பறிப்பதற்கு அனுமதிக்க முடியாது.  ஆதலால் எங்களுடைய நடவடிக்கை தீவிரமாக இருக்கும். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் கூடிய கவனஞ் செலுத்துகின்றோம். தற்போதைய சூழலில் ஏற்படப்போகின்ற பேச்சுவார்த்தைகளில் எல்லாம் இதை முன்னிலைப்படுத்தி எங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். என குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement