• Nov 06 2024

எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை...! சஜித் உறுதி...!

Sharmi / Jun 22nd 2024, 3:02 pm
image

Advertisement

மக்களுக்கு நலன் பயக்கும் 'பிரபஞ்சம்' மற்றும் 'மூச்சு' ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டொலர்களுக்கும், வரப்பிரசாதங்களுக்கும், சலுகைகளுக்கும் அவர்கள் அவர்களது கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாடு வங்குரோத்தடைந்து, மக்கள் வாழ்வு சீரழிந்துள்ள வேளையில், மக்கள் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஒன்று சேர்ந்து, மக்களுக்கு நலன் பயக்கும் பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து வருகின்றனர். இந்தச் சேறுபூசும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

இலவசக் கல்வியை பாதுகாப்போம் என்று கூறுபவர்களின் முட்டாள்தனமான கொள்கைகளால் இலவசக் கல்வி அழிந்து வருவதனால், இலவசக் கல்வியில் ஆங்கில மொழிக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தாமல் கல்வியை மேம்படுத்த முடியாது.

இன்று நாடு முழுவதும் பட்டதாரிகள் வேலை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் துறையில் கூட வேலை கிடைப்பதில்லை. கலைப் பட்டம் அந்நிறுவனங்களுக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து யாரும் பேசுவதில்லை.

சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என்று கூறி தத்தமது வாக்கு வாங்கிகளை அதிகரித்துக் கொள்ளவே அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். காலத்துக் காலம் அரசியல்வாதிகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் 41 இலட்சம் மாணவ தலைமுறைக்கு ஏற்பட்ட மாற்றம் ஏதுமில்லை.

பாடசாலை கட்டமைப்புக்குத் தேவையான வளங்களை வழங்க முடியாத ஆட்சியின் மூலம் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. இலவசக் கல்வியைப் பாதுகாப்பதாகக் கூறி பாத யாத்திரை செல்லும் தரப்பினர் இலவசக் கல்வி மேம்படுவதை ஒருபோதும் விரும்புவதில்லை.

புரட்சியாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் பிள்ளைகள் தனியார் பாடசாலைக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்குமே செல்கின்றார்கள். அவர்களுக்குத் தனியார் கல்வி நல்லதாக இருந்தாலும் இலவசக் கல்வி நல்லதொன்றாக அமையவில்லை. இலவசக் கல்வியை மேம்படுத்த முயலும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளும் தமது பிள்ளைகளின் நிலைக்கு வருவார்கள் என்ற பொறாமைத்தன சிந்தனையுடனயே இவர்கள் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. சஜித் உறுதி. மக்களுக்கு நலன் பயக்கும் 'பிரபஞ்சம்' மற்றும் 'மூச்சு' ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,டொலர்களுக்கும், வரப்பிரசாதங்களுக்கும், சலுகைகளுக்கும் அவர்கள் அவர்களது கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாடு வங்குரோத்தடைந்து, மக்கள் வாழ்வு சீரழிந்துள்ள வேளையில், மக்கள் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஒன்று சேர்ந்து, மக்களுக்கு நலன் பயக்கும் பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய புண்ணிய திட்டங்களுக்கு சேறுபூசி அதனை எதிர்த்து வருகின்றனர். இந்தச் சேறுபூசும் கீழ்த்தரத் தாக்குதல்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.இலவசக் கல்வியை பாதுகாப்போம் என்று கூறுபவர்களின் முட்டாள்தனமான கொள்கைகளால் இலவசக் கல்வி அழிந்து வருவதனால், இலவசக் கல்வியில் ஆங்கில மொழிக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தாமல் கல்வியை மேம்படுத்த முடியாது.இன்று நாடு முழுவதும் பட்டதாரிகள் வேலை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் துறையில் கூட வேலை கிடைப்பதில்லை. கலைப் பட்டம் அந்நிறுவனங்களுக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து யாரும் பேசுவதில்லை.சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என்று கூறி தத்தமது வாக்கு வாங்கிகளை அதிகரித்துக் கொள்ளவே அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். காலத்துக் காலம் அரசியல்வாதிகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் 41 இலட்சம் மாணவ தலைமுறைக்கு ஏற்பட்ட மாற்றம் ஏதுமில்லை.பாடசாலை கட்டமைப்புக்குத் தேவையான வளங்களை வழங்க முடியாத ஆட்சியின் மூலம் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. இலவசக் கல்வியைப் பாதுகாப்பதாகக் கூறி பாத யாத்திரை செல்லும் தரப்பினர் இலவசக் கல்வி மேம்படுவதை ஒருபோதும் விரும்புவதில்லை.புரட்சியாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் பிள்ளைகள் தனியார் பாடசாலைக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்குமே செல்கின்றார்கள். அவர்களுக்குத் தனியார் கல்வி நல்லதாக இருந்தாலும் இலவசக் கல்வி நல்லதொன்றாக அமையவில்லை. இலவசக் கல்வியை மேம்படுத்த முயலும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளும் தமது பிள்ளைகளின் நிலைக்கு வருவார்கள் என்ற பொறாமைத்தன சிந்தனையுடனயே இவர்கள் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement