• Oct 06 2024

ராஜபக்சர்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபடமாட்டோம்! - விமல் திட்டவட்டம் SamugamMedia

Chithra / Feb 14th 2023, 10:27 am
image

Advertisement

2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் முழுமையாக தஞ்சமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் பலமுறை எடுத்துரைத்தோம்.

பொருளாதார நெருக்கடி இறுதியில் பாரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் வரலாற்றில் எவருக்கும் நேராத நிலைமை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டது.

மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் முழுமையாக இல்லாதொழித்துள்ளார்கள்.

ராஜபக்சர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை. 

அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ராஜபக்சர்களுக்கு எதிராக தனித்து அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவதென்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளது.

ராஜபக்சர்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபடமாட்டோம் - விமல் திட்டவட்டம் SamugamMedia 2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் முழுமையாக தஞ்சமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.புத்தளத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் பலமுறை எடுத்துரைத்தோம்.பொருளாதார நெருக்கடி இறுதியில் பாரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் வரலாற்றில் எவருக்கும் நேராத நிலைமை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டது.மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் முழுமையாக இல்லாதொழித்துள்ளார்கள்.ராஜபக்சர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை. அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ராஜபக்சர்களுக்கு எதிராக தனித்து அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவதென்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement