• Jun 26 2024

இந்தியா - இலங்கை ஒப்பந்தமே தமிழரை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது - வேந்தர் பத்மநாதன் தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Aug 4th 2023, 6:11 pm
image

Advertisement

இந்திய இலங்கை ஒப்பந்தமே தமிழரை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வைத்ததோடு வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடமாக ஏற்றுக்கொள்ள வைத்தது என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் வரலாற்று பேராசிரியருமான எஸ் பத்மநாதன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள  தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1972 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இலங்கை இந்திய உடன்படிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலம் சிங்களத்தோடு ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை பலருக்குத் தெரியாது.

இந்தியா இலங்கை உடன்படிக்கை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பதிவிட இடம் என்பதை பதிவு செய்த நிலையில் சாணக்கியமாகவும் இராஜதந்திர முறையில் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை ஒப்புக்கொள்ள வைத்தது.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை பற்றி பேசுபவர்களை சிலர் துரோகிகள் என்கின்றார்கள். இரு  அரசுகளால் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை துரோகமானது என எவரும் கூற முடியாது.

எவ்வாறு கூறுபவர்களுக்கு  வரலாறு தெரியாமல் இருந்திருக்கலாம்.

இலங்கை இன பிரச்சனை  ஜே.ஆர் காலத்தில் மோசமான நிலையை அடைந்து விட்ட நிலையில் உரிய நேரத்தில் கேட்பவற்றை கேளாமையும் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டமையம் பிரச்சனை புரையோடுவதற்கு காரணம்.

தமிழர்கள் ஒரு தேசிய இனம் அவர்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைமைகள் உணர்வுடன் சிந்திக்காமல் கொழும்பை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அணுகியமையும் ஒரு காரணம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1944 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் நாட்டின் ஆட்சி மொழிகள் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் 1947 ஆம் ஆண்டு நிலைமை மாறி விட்டது.

1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன்  பாதுகாப்பு உடன்படிக்கை செய்ததன் மூலம் மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமையை பறிப்பதற்கான சட்டத்தை இயற்றிய நிலையில் சுமார் ஒன்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

1956 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மாற்றி சிங்களம் மற்றும் அரசகரமை மொழியாக சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்காக  மக்கள் சாத்வீகப் போராட்டங்கள் பல செய்ததன் பயனாக 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினார்.

அதன் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக தமிழ் ஆங்கிலம் சிங்களம் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரலாறுகளை தெரியாதவர்கள் வரலாறுகளை தெரிந்து கொள்வதுடன் ஏற்கனவே விட்ட வரலாற்று தவறுகளை இனியும் விடாமல் பயணிக்க வேண்டும்.

மேலும் ஆகவே 25 நாடுகள் சேர்ந்து எமது போராட்டத்துக்கு முடிவு கட்டிய நிலையில் போராளிகளையும் மக்களையும் இழந்த நாம் இனியும் பிழையான வழிகளை பின்பற்றாமல் மக்களுக்காக தலைமைகள் பயணிக்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இந்தியா - இலங்கை ஒப்பந்தமே தமிழரை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது - வேந்தர் பத்மநாதன் தெரிவிப்பு samugammedia இந்திய இலங்கை ஒப்பந்தமே தமிழரை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வைத்ததோடு வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடமாக ஏற்றுக்கொள்ள வைத்தது என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் வரலாற்று பேராசிரியருமான எஸ் பத்மநாதன் தெரிவித்தார்.கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள  தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 1972 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இலங்கை இந்திய உடன்படிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலம் சிங்களத்தோடு ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை பலருக்குத் தெரியாது.இந்தியா இலங்கை உடன்படிக்கை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பதிவிட இடம் என்பதை பதிவு செய்த நிலையில் சாணக்கியமாகவும் இராஜதந்திர முறையில் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை ஒப்புக்கொள்ள வைத்தது.இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை பற்றி பேசுபவர்களை சிலர் துரோகிகள் என்கின்றார்கள். இரு  அரசுகளால் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை துரோகமானது என எவரும் கூற முடியாது.எவ்வாறு கூறுபவர்களுக்கு  வரலாறு தெரியாமல் இருந்திருக்கலாம்.இலங்கை இன பிரச்சனை  ஜே.ஆர் காலத்தில் மோசமான நிலையை அடைந்து விட்ட நிலையில் உரிய நேரத்தில் கேட்பவற்றை கேளாமையும் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டமையம் பிரச்சனை புரையோடுவதற்கு காரணம்.தமிழர்கள் ஒரு தேசிய இனம் அவர்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைமைகள் உணர்வுடன் சிந்திக்காமல் கொழும்பை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அணுகியமையும் ஒரு காரணம்.ஆங்கிலேயர் ஆட்சியில் 1944 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் நாட்டின் ஆட்சி மொழிகள் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் 1947 ஆம் ஆண்டு நிலைமை மாறி விட்டது.1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன்  பாதுகாப்பு உடன்படிக்கை செய்ததன் மூலம் மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமையை பறிப்பதற்கான சட்டத்தை இயற்றிய நிலையில் சுமார் ஒன்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.1956 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மாற்றி சிங்களம் மற்றும் அரசகரமை மொழியாக சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்காக  மக்கள் சாத்வீகப் போராட்டங்கள் பல செய்ததன் பயனாக 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினார்.அதன் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக தமிழ் ஆங்கிலம் சிங்களம் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.வரலாறுகளை தெரியாதவர்கள் வரலாறுகளை தெரிந்து கொள்வதுடன் ஏற்கனவே விட்ட வரலாற்று தவறுகளை இனியும் விடாமல் பயணிக்க வேண்டும்.மேலும் ஆகவே 25 நாடுகள் சேர்ந்து எமது போராட்டத்துக்கு முடிவு கட்டிய நிலையில் போராளிகளையும் மக்களையும் இழந்த நாம் இனியும் பிழையான வழிகளை பின்பற்றாமல் மக்களுக்காக தலைமைகள் பயணிக்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement