• Jun 01 2024

இஸ்ரேல் படையை “கருப்பு பைகளில்” அனுப்புவோம் - ஹமாசின் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலக நாடுகள்..! samugammedia

Tamil nila / Nov 5th 2023, 7:04 am
image

Advertisement

‘காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்களை கருப்பு பைகளில் தான் அனுப்புவோம்’’ என ஹமாஸ் அமைப்பு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உலக அரங்கில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும், யுத்த நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியிருந்தார்.

எனினும்;, காசாவில் யுத்தம் தொடரும் நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஈரான் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கு ஹமாசும், பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையிலேயே ஹமாஸ் தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனிடையே தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல்களால் அல் - சப்ரா பகுதியில் உள்ள அலி பின் அபி தாலிப் மற்றும் அல் - இஸ்திஜாபா என்ற பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிதுக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

அத்தோடு முற்றுகை நடவடிக்கைக்கு மத்தியில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலுக்கு நெருக்கடி நிலை உருவாகி வரும் நிலையில் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேலுக்கான தமது தூதரை திரும்ப பெருவதாக பஹ்ரைன் அறிவித்திருகின்றது.

இந்நிலையில் பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

அதாவது காசா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பஹ்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரபு நாடுகள் கோபத்தில் இருந்தாலும் தற்போது பஹ்ரைன் மட்டுமே தன்னுடைய மொத்த உறவை துண்டித்துள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்ரேல் படையை “கருப்பு பைகளில்” அனுப்புவோம் - ஹமாசின் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலக நாடுகள். samugammedia ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்களை கருப்பு பைகளில் தான் அனுப்புவோம்’’ என ஹமாஸ் அமைப்பு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உலக அரங்கில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும், யுத்த நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியிருந்தார்.எனினும்;, காசாவில் யுத்தம் தொடரும் நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஈரான் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.இதற்கு ஹமாசும், பதிலடி கொடுத்து வருகிறது.இந்த நிலையிலேயே ஹமாஸ் தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.இதனிடையே தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதல்களால் அல் - சப்ரா பகுதியில் உள்ள அலி பின் அபி தாலிப் மற்றும் அல் - இஸ்திஜாபா என்ற பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம் காசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிதுக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.எனினும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.அத்தோடு முற்றுகை நடவடிக்கைக்கு மத்தியில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் இஸ்ரேலுக்கு நெருக்கடி நிலை உருவாகி வரும் நிலையில் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேலுக்கான தமது தூதரை திரும்ப பெருவதாக பஹ்ரைன் அறிவித்திருகின்றது.இந்நிலையில் பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.அதாவது காசா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பஹ்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.மேலும் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரபு நாடுகள் கோபத்தில் இருந்தாலும் தற்போது பஹ்ரைன் மட்டுமே தன்னுடைய மொத்த உறவை துண்டித்துள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement