• May 18 2024

போர் எதிரொலி – இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை! samugammedia

Tamil nila / Nov 5th 2023, 6:45 am
image

Advertisement

இஸ்ரேல்-காஸா போருக்கு எதிரான விமர்சனங்கள் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வலுத்து வரும் நிலையில் பிரதமர் நெட்டன்யாஹுவுக்கு மக்களுக்கு ஆதரவு குறைந்துள்ளது.

பிரதமர் கையாளும் விதத்தை 7 சதவீதம் மட்டுமே ஆதரிப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஹமாஸின் திடீர்த் தாக்குதலைத் தடுக்கத் தவறிய வேவுத்துறையின் குறைபாடுகளுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூசல் முடிவுக்கு வந்த பிறகு திரு. நெட்டன்யாஹு கணிசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். போருக்குப் பிறகு அவரோ அவரது அரசாங்கமோ அதிகாரத்தில் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசியல் தலைமைத்துவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது தெளிவாய் தெரிவதாகவும் கூறப்படுகிறது. மேற்குக் கரையில் நிலவும் சண்டை பற்றி இஸ்ரேலிய அமைச்சர்கள் வெளியிடும் கருத்துகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்.

போர் எதிரொலி – இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை samugammedia இஸ்ரேல்-காஸா போருக்கு எதிரான விமர்சனங்கள் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வலுத்து வரும் நிலையில் பிரதமர் நெட்டன்யாஹுவுக்கு மக்களுக்கு ஆதரவு குறைந்துள்ளது.பிரதமர் கையாளும் விதத்தை 7 சதவீதம் மட்டுமே ஆதரிப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஹமாஸின் திடீர்த் தாக்குதலைத் தடுக்கத் தவறிய வேவுத்துறையின் குறைபாடுகளுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பூசல் முடிவுக்கு வந்த பிறகு திரு. நெட்டன்யாஹு கணிசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். போருக்குப் பிறகு அவரோ அவரது அரசாங்கமோ அதிகாரத்தில் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.அரசியல் தலைமைத்துவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது தெளிவாய் தெரிவதாகவும் கூறப்படுகிறது. மேற்குக் கரையில் நிலவும் சண்டை பற்றி இஸ்ரேலிய அமைச்சர்கள் வெளியிடும் கருத்துகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement