நாட்டிலுள்ள பல ஊழல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலே நாங்கள் திருடர்களை பிடிக்க வேண்டியிருக்கின்றது.
எனவே இனிவரும் காலங்களிலே கைதுகள் வேகமாக நடைபெறவுள்ளது.
பலர் இதில் மாட்ட இருக்கின்றனர். நாங்கள் வேண்டுமென்று ஒருவரையும் கைது செய்யவில்லை.
நாட்டிலுள்ள ஊழல்களை ஒழிக்குமாறு மக்கள் எமக்கு தீர்ப்பளித்துள்ளார்கள்.
அதனடிப்படையில் தாம் நாங்கள் ஊழல்வாதிகளுக்கு எதிரானவர்கள்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக யார் செயற்பட்டாலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஊழல்வாதிகளை விரைவில் சிறைக்கு தள்ளுவோம்:ஒருவரையும் விடமாட்டோம்- ரஜீவன் எம்.பி திட்டவட்டம் நாட்டிலுள்ள பல ஊழல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்களால் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலே நாங்கள் திருடர்களை பிடிக்க வேண்டியிருக்கின்றது.எனவே இனிவரும் காலங்களிலே கைதுகள் வேகமாக நடைபெறவுள்ளது.பலர் இதில் மாட்ட இருக்கின்றனர். நாங்கள் வேண்டுமென்று ஒருவரையும் கைது செய்யவில்லை.நாட்டிலுள்ள ஊழல்களை ஒழிக்குமாறு மக்கள் எமக்கு தீர்ப்பளித்துள்ளார்கள்.அதனடிப்படையில் தாம் நாங்கள் ஊழல்வாதிகளுக்கு எதிரானவர்கள்.மக்களின் விருப்பத்திற்கு மாறாக யார் செயற்பட்டாலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.