திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 91ஆம் கட்டை பகுதியில் நடுவீதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் 35 தடவைகள் தாக்கிய சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஷானி தேனபந்து முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சந்தேநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றி வரும் கந்தளாய் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் உக்குபண்டா அப்புஹாமிலாகே சிறானி புஷ்பலதா (44 வயது) தனது கணவரான தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத்தை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கணவரின் தாக்குதலில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரேத பரிசோதனைக்கான அனுமதி நீதிமன்றத்தினால் கிடைக்கப் பெற்றவுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்
- ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!
- இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்…!
- நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
- அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 2 ஆயிரத்து 755 கிலோ!
- நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்ற ஆளும்கட்சி தமிழ் அரசியல் பிரமுகர்?
- யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
- அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்; 21 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் திட்டம் ஆரம்பம்!
- ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
- காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மகனை காணாமேலேயே மரணம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்