• Sep 29 2024

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா அமைச்சர் விஜயதாச..? - நாளை தீர்மானம்!

Chithra / Jun 23rd 2024, 1:12 pm
image

Advertisement

 

நீதி அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.  

அதன் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இருந்து கொண்டே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதன் ஊடாக, விஜயதாச ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பை மீறி இருப்பதாகக் கூறப்படுகிறது.  

அதன் அடிப்படையில் அவரது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா அமைச்சர் விஜயதாச. - நாளை தீர்மானம்  நீதி அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.  அதன் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இருந்து கொண்டே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதன் ஊடாக, விஜயதாச ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பை மீறி இருப்பதாகக் கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் அவரது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement