• May 10 2024

நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்! SamugamMedia

Chithra / Mar 11th 2023, 7:28 am
image

Advertisement

பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சிட்னியில் ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள், 03.14 விநாடிகளில் நீந்திய புதிய உலக சாதனையை கெய்லி மெக்கோவ்ன் நிலைநாட்டினார்.


இதன்போது அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் 2019 ஆம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது.


21 வயதான கெய்லீ மெக்கோவ்ன், 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் உலக சாதனையாளராகவும் விளங்குகிறார் இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண் SamugamMedia பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.சிட்னியில் ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள், 03.14 விநாடிகளில் நீந்திய புதிய உலக சாதனையை கெய்லி மெக்கோவ்ன் நிலைநாட்டினார்.இதன்போது அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் 2019 ஆம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது.21 வயதான கெய்லீ மெக்கோவ்ன், 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் உலக சாதனையாளராகவும் விளங்குகிறார் இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement