• May 08 2024

இறந்த பொலிஸ் மகனின் பெயரை தேடி கண்டுபிடித்து அழுத பெண்! - நெகிழ்ச்சிச் சம்பவம் SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 6:32 pm
image

Advertisement

அம்பாறை மாவட்டத்தில் 159 வருட பொலிஸ் வீரர் தினம் செவ்வாய்க்கிழமை  (21) இடம்பெற்ற வேளை நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

குறித்த நிகழ்வில் மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன்,  பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ்  மரியாதை நிகழ்வுகளுடன், நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி  செலுத்தப்பட்டது.


இதன் போது நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  ஓய்வூபெற்ற மற்றும் தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் உட்பட  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு நினைவுத் தூபிக்கு மலர் கொத்துக்கள் வைக்க வந்திருந்த அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவர், நீண்ட நேரம் குறித்த நினைவு தூபி அருகில் நின்று மற்றுமொருவரின் துணையுடன்  கடந்த கால போரில் உயிரிழந்த தனது பொலிஸ் மகனின் பெயரை தேடி அழுததை காண முடிந்தது.


குறித்த நிகழ்வில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி ஜெயந்த ரட்நாயக்க    கலந்து கொண்டு பொலிஸ்  கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.

தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்னாலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில்  பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.


இறந்த பொலிஸ் மகனின் பெயரை தேடி கண்டுபிடித்து அழுத பெண் - நெகிழ்ச்சிச் சம்பவம் SamugamMedia அம்பாறை மாவட்டத்தில் 159 வருட பொலிஸ் வீரர் தினம் செவ்வாய்க்கிழமை  (21) இடம்பெற்ற வேளை நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.குறித்த நிகழ்வில் மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன்,  பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ்  மரியாதை நிகழ்வுகளுடன், நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி  செலுத்தப்பட்டது.இதன் போது நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  ஓய்வூபெற்ற மற்றும் தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் உட்பட  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அங்கு நினைவுத் தூபிக்கு மலர் கொத்துக்கள் வைக்க வந்திருந்த அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவர், நீண்ட நேரம் குறித்த நினைவு தூபி அருகில் நின்று மற்றுமொருவரின் துணையுடன்  கடந்த கால போரில் உயிரிழந்த தனது பொலிஸ் மகனின் பெயரை தேடி அழுததை காண முடிந்தது.குறித்த நிகழ்வில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி ஜெயந்த ரட்நாயக்க    கலந்து கொண்டு பொலிஸ்  கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்னாலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில்  பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement