• Mar 10 2025

சிரியாவில் நிலவும் வன்முறை - உலக நாடுகள் கடும் கண்டனம்

Chithra / Mar 8th 2025, 4:11 pm
image



சிரியாவில் மோதல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, 

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மாயீல் பகாயி, நாடு தற்போதைய நிலைமைக்கு தீவிர கவனிப்பு செலுத்தி வருவதாகவும், தொடரும் அமைதியின்மைக்கு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள், முழு பகுதிச் சூழலையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. 

ஈரானின் அரசியல் நிலைப்பாடு, சிரியாவின் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், வெளி சக்திகளின் (முக்கியமாக இஸ்ரேல்) பாதிப்புகளை தடுக்கவும் கவனம் செலுத்துகிறது.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மாயீல் பகாயி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் 

இராணுவ மோதல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், ஈரான் இது தொடர்பாக முழுமையாக கவனித்து வருகின்றது.

சிரியாவில் நிலையான அமைதியை நிலைநிறுத்தி, அனைத்து இனக் குழுக்களும் சமமாக வாழ்வதற்கு 

உறுதியாக ஈரான் செயல்படும்.

எந்தவொரு குழுவை சேர்ந்திருந்தாலும், சாதாரண மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறையை ஈரான் கண்டிக்கிறது. இது மேலும் பிராந்தியத்தை பாதிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரான், சிரியாவில் நிலவும் சூழ்நிலையை மிக கவனமாக கண்காணித்து வருகிறது.

சிரியாவின் புவியியல் ஒருமைப்பாட்டை (territorial integrity) பாதுகாக்க ஈரான் உறுதியாக உள்ளது.

இந்த மோதல்களுக்கு பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச சக்திகள் ஈடுபட்டுள்ளதால், 

அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகி வருகின்றன எனவும் ஈரான் தரப்பு கூறுகின்றது.

 

இந்நிலையில்  சிரியாவில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரேஸ் நிலைமையைப் பற்றிய தனது கருத்துகளை அதிகாரப்பூர்வ செய்தியாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஊடாக வெளியிட்டார்.

சிரியாவின் கடலோரப் பகுதிகளில் சமீபத்திய மோதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வந்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து தரப்பும் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும்.

சிரியாவில் தற்போது சுமூக அரசியல் மாற்றம் மற்றும் சமாதான முயற்சிகள் முன்னிலையாக வேண்டும். 

14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரை சந்தித்து வரும் மக்கள், நிதானமான அமைதிக்கும், வளர்ச்சிக்கும், நீதிக்கும் தகுதியானவர்கள்.

சிரியா புதிய அதிபர் அகமது அல் ஷரா,  அஸாத் அரசு ஆதரவாளர்களை நீதியின் முன் விசாரணை செய்யவும், ஆயுதங்கள், இராணுவம் மற்றும் காவல்துறையை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்..

அத்துடன் ஐ.நா பொதுச்செயலாளர், பொதுமக்கள் மீதான வன்முறையை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதேவேளை சிரியாவில் இனக்குழுக்களுக்கு இடையே நிலவும் மோதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதனால் புதிய அரசு, ஆயுதங்களை தனியார் குழுக்களிடமிருந்து முழுமையாக மீட்டு, நாட்டின் பாதுகாப்பை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.

சிரியாவில் நிலவும் வன்முறை - உலக நாடுகள் கடும் கண்டனம் சிரியாவில் மோதல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மாயீல் பகாயி, நாடு தற்போதைய நிலைமைக்கு தீவிர கவனிப்பு செலுத்தி வருவதாகவும், தொடரும் அமைதியின்மைக்கு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.சிரியாவில் நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் வன்முறைகள், முழு பகுதிச் சூழலையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. ஈரானின் அரசியல் நிலைப்பாடு, சிரியாவின் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், வெளி சக்திகளின் (முக்கியமாக இஸ்ரேல்) பாதிப்புகளை தடுக்கவும் கவனம் செலுத்துகிறது.ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மாயீல் பகாயி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இராணுவ மோதல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், ஈரான் இது தொடர்பாக முழுமையாக கவனித்து வருகின்றது.சிரியாவில் நிலையான அமைதியை நிலைநிறுத்தி, அனைத்து இனக் குழுக்களும் சமமாக வாழ்வதற்கு உறுதியாக ஈரான் செயல்படும்.எந்தவொரு குழுவை சேர்ந்திருந்தாலும், சாதாரண மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறையை ஈரான் கண்டிக்கிறது. இது மேலும் பிராந்தியத்தை பாதிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ஈரான், சிரியாவில் நிலவும் சூழ்நிலையை மிக கவனமாக கண்காணித்து வருகிறது.சிரியாவின் புவியியல் ஒருமைப்பாட்டை (territorial integrity) பாதுகாக்க ஈரான் உறுதியாக உள்ளது.இந்த மோதல்களுக்கு பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச சக்திகள் ஈடுபட்டுள்ளதால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகி வருகின்றன எனவும் ஈரான் தரப்பு கூறுகின்றது. இந்நிலையில்  சிரியாவில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரேஸ் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் கடலோரப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளார்.ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரேஸ் நிலைமையைப் பற்றிய தனது கருத்துகளை அதிகாரப்பூர்வ செய்தியாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஊடாக வெளியிட்டார்.சிரியாவின் கடலோரப் பகுதிகளில் சமீபத்திய மோதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வந்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து தரப்பும் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும்.சிரியாவில் தற்போது சுமூக அரசியல் மாற்றம் மற்றும் சமாதான முயற்சிகள் முன்னிலையாக வேண்டும். 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரை சந்தித்து வரும் மக்கள், நிதானமான அமைதிக்கும், வளர்ச்சிக்கும், நீதிக்கும் தகுதியானவர்கள்.சிரியா புதிய அதிபர் அகமது அல் ஷரா,  அஸாத் அரசு ஆதரவாளர்களை நீதியின் முன் விசாரணை செய்யவும், ஆயுதங்கள், இராணுவம் மற்றும் காவல்துறையை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஐ.நா பொதுச்செயலாளர், பொதுமக்கள் மீதான வன்முறையை கடுமையாக கண்டித்துள்ளார்.இதேவேளை சிரியாவில் இனக்குழுக்களுக்கு இடையே நிலவும் மோதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதனால் புதிய அரசு, ஆயுதங்களை தனியார் குழுக்களிடமிருந்து முழுமையாக மீட்டு, நாட்டின் பாதுகாப்பை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement