• May 18 2024

கொழும்பை முடக்க முடியாது..! மொட்டுக் கட்சியின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்ட அமைச்சர்! samugammedia

Chithra / Jun 18th 2023, 11:37 am
image

Advertisement

நாட்டின் அபிவிருத்தி என்ற ஒருவிடயத்தை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக நாட்டிற்கு அழிவை ஏற்படுத்துகின்ற சட்டவிரோத செயலுக்கான பயணத்தை ஒருபோது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுக்காது என்றும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்ற பொய்யான வதந்திகளுக்கு அஞ்சாமல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்தாவிட்டால் கொழும்பை முடக்கப்போவதாக எதிர்கட்சிகள் தெரிவித்திருந்தன.

ஆனால் தொலைக்காட்சியில் பார்த்தபோது மிகவும் குறைந்த அளவிலான எதிர்பாளர்ளே வருகை தந்திருந்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பை முடக்க முடியாது. மொட்டுக் கட்சியின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்ட அமைச்சர் samugammedia நாட்டின் அபிவிருத்தி என்ற ஒருவிடயத்தை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறிப்பாக நாட்டிற்கு அழிவை ஏற்படுத்துகின்ற சட்டவிரோத செயலுக்கான பயணத்தை ஒருபோது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுக்காது என்றும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்ற பொய்யான வதந்திகளுக்கு அஞ்சாமல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.தேர்தலை நடத்தாவிட்டால் கொழும்பை முடக்கப்போவதாக எதிர்கட்சிகள் தெரிவித்திருந்தன.ஆனால் தொலைக்காட்சியில் பார்த்தபோது மிகவும் குறைந்த அளவிலான எதிர்பாளர்ளே வருகை தந்திருந்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement