• Nov 25 2024

'யுக்திய' நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..!

Chithra / Dec 27th 2023, 4:22 pm
image

யுக்திய’ தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது. போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் வரை அது தொடரும். எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும்(26) நேற்று முன்தினமும்(25) யுக்திய சுற்றிவளைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சகலரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தும் வரையில் இந்த சுற்றிவளைப்பு

முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான 'யுக்திய சுற்றிவளைப்பு' நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிக்கும் வகையில் பொலிஸ் சட்டப் பிரிவின் ஊடாக பொலிஸ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்

பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


'யுக்திய' நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பம். யுக்திய’ தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது. போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் வரை அது தொடரும். எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும்(26) நேற்று முன்தினமும்(25) யுக்திய சுற்றிவளைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சகலரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தும் வரையில் இந்த சுற்றிவளைப்புமுன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.இதேவேளை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான 'யுக்திய சுற்றிவளைப்பு' நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிக்கும் வகையில் பொலிஸ் சட்டப் பிரிவின் ஊடாக பொலிஸ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement