• May 05 2024

நடுக்கடலில் சிக்கித்தவித்த 1,000 அகதிகள்! SamugamMedia

Tamil nila / Mar 14th 2023, 6:41 am
image

Advertisement

துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக செல்கின்றனர்.


இந்த நிலையில், இத்தாலிக்கு சென்ற சில அகதிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து, கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கித்தவித்த அகதிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.


1,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை,  கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


அதில் 2 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்தனர்.


இதனையடுத்து இத்தாலி கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடுக்கடலில் சிக்கித்தவித்த 1,000 அகதிகள் SamugamMedia துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக செல்கின்றனர்.இந்த நிலையில், இத்தாலிக்கு சென்ற சில அகதிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து, கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கித்தவித்த அகதிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.1,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை,  கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதில் 2 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து இத்தாலி கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement