• May 21 2024

நுரைச்சோலையில் 1286 கிலோ பீடி இலைகள் மீட்பு! samugammedia

Tamil nila / Dec 7th 2023, 10:46 pm
image

Advertisement

கற்பிட்டி - நுரைச்சோலை தேத்தாப்பொல பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன.

நுரைச்சோலை - தேத்தாப்பொல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹேந்திரா லொறியொன்றை கடற்படையினர் சோதனை செய்த போது, அந்த அந்த லொறியில் 41 மூடைகளில் அடைக்கப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பீடி இலைகள் ஏற்றிய அந்த வாகனம் நுரைச்சோலை பகுதியிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்கள் பயணித்த லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கற்பிட்டி - கீரிமுந்தல் களப்பு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 465 கிலோ கிராம் பீடி இலைகள் ஞாயிற்றுக்கிழமை (3) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

மேலும், கடந்த மூன்று மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நுரைச்சோலையில் 1286 கிலோ பீடி இலைகள் மீட்பு samugammedia கற்பிட்டி - நுரைச்சோலை தேத்தாப்பொல பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்போது, சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன.நுரைச்சோலை - தேத்தாப்பொல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹேந்திரா லொறியொன்றை கடற்படையினர் சோதனை செய்த போது, அந்த அந்த லொறியில் 41 மூடைகளில் அடைக்கப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.பீடி இலைகள் ஏற்றிய அந்த வாகனம் நுரைச்சோலை பகுதியிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்கள் பயணித்த லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, கற்பிட்டி - கீரிமுந்தல் களப்பு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 465 கிலோ கிராம் பீடி இலைகள் ஞாயிற்றுக்கிழமை (3) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.மேலும், கடந்த மூன்று மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement