• Mar 22 2025

மட்டக்களப்பில் 161 ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு..!

Sharmi / Mar 21st 2025, 3:48 pm
image

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் தேசிய பொலிஸ் வீரர்கள் தினத்தையிட்டு இன்று(21)  மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தர மலர் வளையம் வைத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் நினைவு கூறப்பட்டுவரும் பொலிஸ் தினத்தையிட்டு  மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் இடம்பெற்றது

இதில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தர, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உயிர் நீத்தவர்களின் உறவுகள் கலந்து கொண்டு பொலிஸ் திணைகள கொடியேற்றப்பட்டு  பொலஜஸ் மரியாதை அணிவகுப்புடன் மலர் வளையம் வைத்து  மௌன அஞ்சலி செலுத்தினர்.

மாவனெல்ல பிரதேசத்தில் 1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் முதல் முதல் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மார்ச் 21 ம் திகதி பொலிஸ் வீர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று  வரையான காலத்தில் சுமார் 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன் மாகாணத்தில் 417  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


மட்டக்களப்பில் 161 ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு. இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் தேசிய பொலிஸ் வீரர்கள் தினத்தையிட்டு இன்று(21)  மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தர மலர் வளையம் வைத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் நினைவு கூறப்பட்டுவரும் பொலிஸ் தினத்தையிட்டு  மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் இடம்பெற்றதுஇதில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தர, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உயிர் நீத்தவர்களின் உறவுகள் கலந்து கொண்டு பொலிஸ் திணைகள கொடியேற்றப்பட்டு  பொலஜஸ் மரியாதை அணிவகுப்புடன் மலர் வளையம் வைத்து  மௌன அஞ்சலி செலுத்தினர்.மாவனெல்ல பிரதேசத்தில் 1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் முதல் முதல் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மார்ச் 21 ம் திகதி பொலிஸ் வீர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று  வரையான காலத்தில் சுமார் 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன் மாகாணத்தில் 417  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement