• May 05 2024

2022 சர்வதேச திரைப்பட விழா !! போட்டியில் களம் இறங்கிய தமிழ் படங்கள்!

crownson / Dec 6th 2022, 1:04 pm
image

Advertisement

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் டிசம்பர் 15 திகதி முதல் 22 திகதி வரை நடைபெற உள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 48 நாடுகளில் இருந்து 107 படங்கள் திரையிடப்படுகிறது.

தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன.

CIFF-ன் இந்த ஆண்டு விழாவைப் பற்றிய விவரங்களை அறிவிக்கவும், போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்களின் பட்டியலை வெளியிடவும் விழா ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி,

பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல், விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் மாமனிதன், ராம்நாத் பழனிகுமாரின் ஆதார், சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான கசடதபற, வைபவ் நடிப்பில், அசோக் வீரப்பனின் பபூன், மனோ வீ கண்ணதாசனின் இறுதி பக்கம், ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த O2 ஆகியப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதோடு இன்னும் வெளியாகாத பிகினிங், யுத்த காண்டம், மற்றும் ஆடு ஆகியவை அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன. இவைகள் சிறந்த திரைப்பட விருதுக்கு போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 சர்வதேச திரைப்பட விழா போட்டியில் களம் இறங்கிய தமிழ் படங்கள் 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் டிசம்பர் 15 திகதி முதல் 22 திகதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 48 நாடுகளில் இருந்து 107 படங்கள் திரையிடப்படுகிறது.தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன. CIFF-ன் இந்த ஆண்டு விழாவைப் பற்றிய விவரங்களை அறிவிக்கவும், போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்களின் பட்டியலை வெளியிடவும் விழா ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி, பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல், விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் மாமனிதன், ராம்நாத் பழனிகுமாரின் ஆதார், சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான கசடதபற, வைபவ் நடிப்பில், அசோக் வீரப்பனின் பபூன், மனோ வீ கண்ணதாசனின் இறுதி பக்கம், ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த O2 ஆகியப் படங்கள் இடம்பெற்றுள்ளன.அதோடு இன்னும் வெளியாகாத பிகினிங், யுத்த காண்டம், மற்றும் ஆடு ஆகியவை அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன. இவைகள் சிறந்த திரைப்பட விருதுக்கு போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement