• May 05 2024

30 ரூபாவுக்கு முட்டை வழங்க தீர்மானம்! அமைச்சரின் விசேட அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 26th 2023, 7:54 am
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வெதுப்பகங்களுக்கு 30 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது.

முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா படி உணவகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, பேக்கரி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் முட்டையை பாவனைக்கு உட்படுத்தும் போது கையுறை பாவிக்க வேண்டும் எனவும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அகற்ற அல்லது அழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வௌிநாடுகள் சிலவற்றில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

30 ரூபாவுக்கு முட்டை வழங்க தீர்மானம் அமைச்சரின் விசேட அறிவிப்பு SamugamMedia இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வெதுப்பகங்களுக்கு 30 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது.முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா படி உணவகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுஇறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.இதற்கமைய, பேக்கரி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் முட்டையை பாவனைக்கு உட்படுத்தும் போது கையுறை பாவிக்க வேண்டும் எனவும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அகற்ற அல்லது அழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வௌிநாடுகள் சிலவற்றில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement