• May 05 2024

நிச்சயதார்த்ததிற்கு முன் பெண்ணை கடத்திய 50 பேர் கும்பல்- பயங்கர தாக்குதல்!

Tamil nila / Dec 11th 2022, 4:14 pm
image

Advertisement

திருமண நிச்சயதார்த்ததிற்கு சில மணிநேரங்களுக்கு முன், மணப்பெண்ணை 50 பேர் கொண்டு கும்பல் கடத்திச்சென்றது மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டில் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் வீடியோ வைரலானது.   


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியும், ரங்காரெட்டி மாவட்டமுமான அதிபட்லா என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமண நிச்சயதார்த்தத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சுமார் 50 முதல் 80 பேர் கொண்ட குழு, வீடு புகுந்து 24 வயதான மணப்பெண்ணை கடத்தியுள்ளனர். 


கையில் கட்டைகள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உடன் வீட்டிற்குள் நுழைந்து, பல் மருத்துவ படித்துக்கொண்டிருக்கும், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த கும்பலை எதிர்க்க முயன்ற பெண்ணின் தந்தை, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், வீட்டின் வளாகத்தில் இருந்த பொருள்கள் மற்றும் வாகனங்களை என பலவற்றை சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


பெண்ணை கும்பல் கடத்திச்சென்றதாக அந்த பெண்ணின் தந்தை தாமோதர் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது மகளை நவீன் ரெட்டி என்பவரும் அவருடன் 50 பேரும் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியாகவும், நவீன் ரெட்டி என்பவர் தனது மகளை திருமணம் செய்துவிட்டதாக தொடர்ந்து பொய் தகவலை பரப்பி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 



நிச்சயதார்த்தத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஹைதராபாத் புறநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஒரு கும்பலால் பெண் ஒருவரை வியத்தகு முறையில் கடத்திய வழக்கில் 16 பேரை போலீசார் கைது செய்தனர். அதிபட்லாவில் உள்ள துர்காயம்ஜல் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து சுமார் 50 முதல் 80 பேர் கொண்ட குழுவால் கடத்தப்பட்ட 24 வயது பெண்ணை ரச்சகொண்டா போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனர்.



இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலோர் குச்சிகள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து, பல் மருத்துவ மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்களை எதிர்க்க முயன்ற அவரது தந்தை, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தாக்கினர். மேலும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மரச்சாமான்கள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.



அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறிய நவீன் ரெட்டி, வேறொரு நபருடன் நிச்சயதார்த்தத்திற்கு பெற்றோர் தயாராகி வந்த நிலையில், சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தாமோதர் ரெட்டி அளித்த புகாரின் பேரில், நவீன் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல், அத்துமீறி நுழைந்து தாக்குதல் ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


இதுகுறித்து, கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில்,"பெங்களூருவில் எனது மகளை நவீன் ரெட்டி என்பவர் பேட்மிண்டன் பயிற்சி முகாமில் சந்தித்துள்ளார். அப்போது இருந்து, கடந்த 2 ஆண்டுகளாக எனது மகளை தொந்தரவு செய்து வருகிறார். மேலும், 2021 ஏப்ரல் மாதமே எனது மகளை திருமணம் செய்துவிட்டதாக பொய் தகவலை பரப்பி வருகிறார். வெள்ளிக்கிழமை (டிச. 8) அன்று, நவீன் ரெட்டி உள்ளிட்ட 50 பேர் சேர்ந்து என் மகளை கடத்திச்சென்றனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் எனது மகள், உறவினர்கள் ஆகியோர்களை கொல்ல முயன்றனர். 


நவீன் ரெட்டி, இரும்பு கம்பியை வைத்து எனது தலையில் பலமாக தாக்கினார். மேலும், அந்த கும்பலை தடுக்க வந்த எனது உறவினர்களையும் தாக்கினர். 


தொடர்ந்து, காரில் எனது மகளை வலுகட்டாயமாக ஏற்றி கடத்திச்சென்றனர்" என்றார். அந்த பெண்ணிற்கு, சில மணிநேரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், கும்பல் இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. 


பெண்ணின் தந்தை அளித்த புகாரை அடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் இதுதொடர்பாக 16 பேரை கைதுசெய்தனர். நவீன் ரெட்டி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு மேற்கொண்டனர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்றே போலீசார் கடத்தப்பட்ட அந்த பெண்ணை மீட்டனர். 


அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


நவீன் ரெட்டி என்பவர் சைக்கோ என்றும்,  அந்த பெண் தனது மனைவி என்று தொடர்ந்து கூறி வருவதாக பெண்ணின் தந்தை தமோதிர ரெட்டி கூறியுள்ளார். மேலும்,  தனது மனைவியின் பெற்றோர், அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை என நவீன் ரெட்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். எனவே, இது, குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நிச்சயதார்த்ததிற்கு முன் பெண்ணை கடத்திய 50 பேர் கும்பல்- பயங்கர தாக்குதல் திருமண நிச்சயதார்த்ததிற்கு சில மணிநேரங்களுக்கு முன், மணப்பெண்ணை 50 பேர் கொண்டு கும்பல் கடத்திச்சென்றது மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டில் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் வீடியோ வைரலானது.   தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியும், ரங்காரெட்டி மாவட்டமுமான அதிபட்லா என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமண நிச்சயதார்த்தத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சுமார் 50 முதல் 80 பேர் கொண்ட குழு, வீடு புகுந்து 24 வயதான மணப்பெண்ணை கடத்தியுள்ளனர். கையில் கட்டைகள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உடன் வீட்டிற்குள் நுழைந்து, பல் மருத்துவ படித்துக்கொண்டிருக்கும், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த கும்பலை எதிர்க்க முயன்ற பெண்ணின் தந்தை, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், வீட்டின் வளாகத்தில் இருந்த பொருள்கள் மற்றும் வாகனங்களை என பலவற்றை சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.பெண்ணை கும்பல் கடத்திச்சென்றதாக அந்த பெண்ணின் தந்தை தாமோதர் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது மகளை நவீன் ரெட்டி என்பவரும் அவருடன் 50 பேரும் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியாகவும், நவீன் ரெட்டி என்பவர் தனது மகளை திருமணம் செய்துவிட்டதாக தொடர்ந்து பொய் தகவலை பரப்பி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். நிச்சயதார்த்தத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஹைதராபாத் புறநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஒரு கும்பலால் பெண் ஒருவரை வியத்தகு முறையில் கடத்திய வழக்கில் 16 பேரை போலீசார் கைது செய்தனர். அதிபட்லாவில் உள்ள துர்காயம்ஜல் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து சுமார் 50 முதல் 80 பேர் கொண்ட குழுவால் கடத்தப்பட்ட 24 வயது பெண்ணை ரச்சகொண்டா போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனர்.இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலோர் குச்சிகள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து, பல் மருத்துவ மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்களை எதிர்க்க முயன்ற அவரது தந்தை, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தாக்கினர். மேலும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மரச்சாமான்கள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறிய நவீன் ரெட்டி, வேறொரு நபருடன் நிச்சயதார்த்தத்திற்கு பெற்றோர் தயாராகி வந்த நிலையில், சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தாமோதர் ரெட்டி அளித்த புகாரின் பேரில், நவீன் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல், அத்துமீறி நுழைந்து தாக்குதல் ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இதுகுறித்து, கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில்,"பெங்களூருவில் எனது மகளை நவீன் ரெட்டி என்பவர் பேட்மிண்டன் பயிற்சி முகாமில் சந்தித்துள்ளார். அப்போது இருந்து, கடந்த 2 ஆண்டுகளாக எனது மகளை தொந்தரவு செய்து வருகிறார். மேலும், 2021 ஏப்ரல் மாதமே எனது மகளை திருமணம் செய்துவிட்டதாக பொய் தகவலை பரப்பி வருகிறார். வெள்ளிக்கிழமை (டிச. 8) அன்று, நவீன் ரெட்டி உள்ளிட்ட 50 பேர் சேர்ந்து என் மகளை கடத்திச்சென்றனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் எனது மகள், உறவினர்கள் ஆகியோர்களை கொல்ல முயன்றனர். நவீன் ரெட்டி, இரும்பு கம்பியை வைத்து எனது தலையில் பலமாக தாக்கினார். மேலும், அந்த கும்பலை தடுக்க வந்த எனது உறவினர்களையும் தாக்கினர். தொடர்ந்து, காரில் எனது மகளை வலுகட்டாயமாக ஏற்றி கடத்திச்சென்றனர்" என்றார். அந்த பெண்ணிற்கு, சில மணிநேரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், கும்பல் இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. பெண்ணின் தந்தை அளித்த புகாரை அடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் இதுதொடர்பாக 16 பேரை கைதுசெய்தனர். நவீன் ரெட்டி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு மேற்கொண்டனர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்றே போலீசார் கடத்தப்பட்ட அந்த பெண்ணை மீட்டனர். அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.நவீன் ரெட்டி என்பவர் சைக்கோ என்றும்,  அந்த பெண் தனது மனைவி என்று தொடர்ந்து கூறி வருவதாக பெண்ணின் தந்தை தமோதிர ரெட்டி கூறியுள்ளார். மேலும்,  தனது மனைவியின் பெற்றோர், அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை என நவீன் ரெட்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். எனவே, இது, குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement