• May 18 2024

இலங்கையில் 78 பெண்கள் கொலை – சர்வதேச மகளீர் தினத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.! SamugamMedia

Tamil nila / Mar 8th 2023, 5:02 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள, ஒட்டுமொத்த பெண்ளையும் பார்க்கும் போது அனைத்து துறைகளிலும் அவர்கள் இரண்டாம் தர பிரஜையாகவே காணப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனக்கு இன்று உரையாற்றுவதற்கு 10 நிமிடங்களை ஒதுக்கியதுகூட ஆச்சரியமாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.


நாடாளுமன்றத்தில் கூட பெண் உறுப்பினர்களுக்கு இரண்டாம் இடத்தினையே வழங்குவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.


மார்ச் 08 ஆம் திகதி மட்டுமே மகளீருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாளில்கூட பெண்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.


கர்ப்பிணி பெண்ணிற்கு போசாக்கான உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்தினையும் வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்டார்.


மின்சாரம் இல்லை மின்சார கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பெண்கள் பதாதைகளை ஏந்தியவாறு வீதியில் இறங்கும் போது மின்சாரம் கிடைத்துவிடுமா என கேள்வி எழுப்பிய மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வீதிக்கு பெண்கள் இறங்குவதால் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படும் என்றும் அத்துடன் வெளிநாட்டு ஊடகங்கள் இதனையே 

முதன்மைப்படுத்தி செய்திகளை வெளியிடும் போது அது இலங்கைக்கே பாதகமாக அமையும் என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் இந்த நாட்டில் 78 பெண்கள் கொலை செய்யப்பட்டள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, பெண்களை பாதுகாப்பதற்கு பொலிசார் மற்றும் சட்ட ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றும்  கீதா குமாரசிங்ஹ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 78 பெண்கள் கொலை – சர்வதேச மகளீர் தினத்தில் வெளியான அதிர்ச்சி தகவல். SamugamMedia இலங்கையிலுள்ள, ஒட்டுமொத்த பெண்ளையும் பார்க்கும் போது அனைத்து துறைகளிலும் அவர்கள் இரண்டாம் தர பிரஜையாகவே காணப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனக்கு இன்று உரையாற்றுவதற்கு 10 நிமிடங்களை ஒதுக்கியதுகூட ஆச்சரியமாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.நாடாளுமன்றத்தில் கூட பெண் உறுப்பினர்களுக்கு இரண்டாம் இடத்தினையே வழங்குவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.மார்ச் 08 ஆம் திகதி மட்டுமே மகளீருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாளில்கூட பெண்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.கர்ப்பிணி பெண்ணிற்கு போசாக்கான உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்தினையும் வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்டார்.மின்சாரம் இல்லை மின்சார கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பெண்கள் பதாதைகளை ஏந்தியவாறு வீதியில் இறங்கும் போது மின்சாரம் கிடைத்துவிடுமா என கேள்வி எழுப்பிய மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வீதிக்கு பெண்கள் இறங்குவதால் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படும் என்றும் அத்துடன் வெளிநாட்டு ஊடகங்கள் இதனையே முதன்மைப்படுத்தி செய்திகளை வெளியிடும் போது அது இலங்கைக்கே பாதகமாக அமையும் என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் இந்த நாட்டில் 78 பெண்கள் கொலை செய்யப்பட்டள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, பெண்களை பாதுகாப்பதற்கு பொலிசார் மற்றும் சட்ட ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றும்  கீதா குமாரசிங்ஹ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement