• May 05 2024

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 4வயது சிறுவன்..! என்ன செய்தார் தெரியுமா?samugammedia

Sharmi / Apr 2nd 2023, 10:25 pm
image

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒரு புத்தகத்தை எழுதி அனைத்து சாதனைகளையும் தகர்த்துவிட்டார்.


கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவனுக்கு 4 வயது தான் ஆகிறது. சரியாகச் 4 ஆண்டுகள் 218 நாட்களில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.


இதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

"மார்ச் 9, 2023 அன்று, அவரது சயீத் என்ற யானையும் கரடியும் (The Elephant Saeed and the Bear) என்ற குழந்தைகள் புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையான பிறகு அவரது சாதனைப் பதிவு சரிபார்க்கப்பட்டது.


இந்தப் புத்தகம் இரு விலங்குகளுக்கு இடையே எதிர்பாராத நட்பு ஏற்பட்டதைப் பற்றிய கதை."

சயீத் தனது மூத்த சகோதரி அல்தாபியிடமிருந்து உத்வேகம் பெற்று தனது புத்தகத்தை எழுதியு்ள்ளார். 8 வயதாகும் மூத்த சகோதரி அல்தாபி மிக இள வயதில் பலமொழிகளில் புத்தக சீரீஸ் வெளியிட்ட பெண் என்ற சாதனையைப் படைத்தவர். முன்னதாக,  மிக இளமையில் பலமொழி புத்தகத்தை வெளியிட்ட பெண் என்ற சாதனையையும் வசப்படுத்தியவர்.


புதுமையை விரும்பும் அல்தாபி நாட்டின் இளைய தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். உள்நாட்டு பதிப்பகமான ரெயின்போ சிம்னி எஜுகேஷனல் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்.


"நான் என் சகோதரியை மிகவும் நேசிக்கிறேன், அவளுடன் எப்போதும் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். நாங்கள் ஒன்றாகப் படிக்கிறோம், எழுதுகிறோம், வரைகிறோம், மேலும் பல செயல்களை ஒன்றாகச் செய்கிறோம். இது என் சொந்த புத்தகம் என்றாலும் நான் அதை அவளால் ஈர்க்கப்பட்டே எழுதினேன். " என்று சயீத் ரஷீத் அல்மெய்ரி கூறுகிறார்.

தன் புத்தகம் பற்றிக் கூறும் அவர், "இது யானை மற்றும் ஒரு துருவ கரடி பற்றிய கதை இது. யானை உல்லாசமாக இருந்தது, அது ஒரு துருவ கரடியைப் பார்த்தது. கரடி தன்னைச் சாப்பிடப் போகிறது என்று நினைக்கிறது. ஆனால், இறுதியில், யானையிடம் கருணை காட்டுகிறது. இருவரும் நண்பர்களாகி ஒன்றாக பிக்னிக் செல்கிறார்கள்" என்று தெரிவிக்கிறார்.




கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 4வயது சிறுவன். என்ன செய்தார் தெரியுமாsamugammedia ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒரு புத்தகத்தை எழுதி அனைத்து சாதனைகளையும் தகர்த்துவிட்டார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவனுக்கு 4 வயது தான் ஆகிறது. சரியாகச் 4 ஆண்டுகள் 218 நாட்களில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்."மார்ச் 9, 2023 அன்று, அவரது சயீத் என்ற யானையும் கரடியும் (The Elephant Saeed and the Bear) என்ற குழந்தைகள் புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையான பிறகு அவரது சாதனைப் பதிவு சரிபார்க்கப்பட்டது. இந்தப் புத்தகம் இரு விலங்குகளுக்கு இடையே எதிர்பாராத நட்பு ஏற்பட்டதைப் பற்றிய கதை."சயீத் தனது மூத்த சகோதரி அல்தாபியிடமிருந்து உத்வேகம் பெற்று தனது புத்தகத்தை எழுதியு்ள்ளார். 8 வயதாகும் மூத்த சகோதரி அல்தாபி மிக இள வயதில் பலமொழிகளில் புத்தக சீரீஸ் வெளியிட்ட பெண் என்ற சாதனையைப் படைத்தவர். முன்னதாக,  மிக இளமையில் பலமொழி புத்தகத்தை வெளியிட்ட பெண் என்ற சாதனையையும் வசப்படுத்தியவர்.புதுமையை விரும்பும் அல்தாபி நாட்டின் இளைய தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். உள்நாட்டு பதிப்பகமான ரெயின்போ சிம்னி எஜுகேஷனல் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்."நான் என் சகோதரியை மிகவும் நேசிக்கிறேன், அவளுடன் எப்போதும் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். நாங்கள் ஒன்றாகப் படிக்கிறோம், எழுதுகிறோம், வரைகிறோம், மேலும் பல செயல்களை ஒன்றாகச் செய்கிறோம். இது என் சொந்த புத்தகம் என்றாலும் நான் அதை அவளால் ஈர்க்கப்பட்டே எழுதினேன். " என்று சயீத் ரஷீத் அல்மெய்ரி கூறுகிறார்.தன் புத்தகம் பற்றிக் கூறும் அவர், "இது யானை மற்றும் ஒரு துருவ கரடி பற்றிய கதை இது. யானை உல்லாசமாக இருந்தது, அது ஒரு துருவ கரடியைப் பார்த்தது. கரடி தன்னைச் சாப்பிடப் போகிறது என்று நினைக்கிறது. ஆனால், இறுதியில், யானையிடம் கருணை காட்டுகிறது. இருவரும் நண்பர்களாகி ஒன்றாக பிக்னிக் செல்கிறார்கள்" என்று தெரிவிக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement