• Mar 16 2025

புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு வன்முறை கும்பலால் கொலை அச்சுறுத்தல்..!

Sharmi / Jul 30th 2024, 10:31 pm
image

புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு வன்முறைக் கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை  முல்லைத்தீவை சேர்ந்த வேறு நபர் ஒருவர் அடாத்தாக காணிக்கு உரிமை கோரி வந்துள்ளார்.

இந்நிலையில், வன்முறை கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதனை  தொடர்ந்து குறித்த வர்த்தகரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிஸாருடனும் முரண்பட்ட குற்றச்சாட்டில் பெண்மணி ஒருவர் இன்றையதினம்(30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட  பெண்மணியின் மகன் என கூறப்படும் நபர்களால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு வன்முறை கும்பலால் கொலை அச்சுறுத்தல். புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு வன்முறைக் கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை  முல்லைத்தீவை சேர்ந்த வேறு நபர் ஒருவர் அடாத்தாக காணிக்கு உரிமை கோரி வந்துள்ளார். இந்நிலையில், வன்முறை கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதனை  தொடர்ந்து குறித்த வர்த்தகரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிஸாருடனும் முரண்பட்ட குற்றச்சாட்டில் பெண்மணி ஒருவர் இன்றையதினம்(30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்ட  பெண்மணியின் மகன் என கூறப்படும் நபர்களால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now