• Sep 20 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி! சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளது! வடிவேல் சுரேஷ் எம்.பி

Chithra / Jun 3rd 2024, 3:32 pm
image

Advertisement

  

சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளது. நீதி வென்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கூறி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இன்றைய தினம் அவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது கடந்த மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி நியாயமானது எனவும் அதனை ரத்து செய்ய முடியாது எனவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

எது எவ்வாறாக இருப்பினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை காண்கின்றது.

அதிகரிக்கப்பட்ட சம்பளம் முறையாக பெருந்தோட்ட தொழிலாளர்களை சென்றடைவதற்கும், தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்கள் பக்கம் பலமாக நின்று செயல்படுவோம் என தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளது வடிவேல் சுரேஷ் எம்.பி   சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளது. நீதி வென்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கூறி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.இன்றைய தினம் அவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது கடந்த மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி நியாயமானது எனவும் அதனை ரத்து செய்ய முடியாது எனவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதுஎது எவ்வாறாக இருப்பினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை காண்கின்றது.அதிகரிக்கப்பட்ட சம்பளம் முறையாக பெருந்தோட்ட தொழிலாளர்களை சென்றடைவதற்கும், தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்கள் பக்கம் பலமாக நின்று செயல்படுவோம் என தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement