• May 18 2024

கொழும்பில் இன்று படையெடுக்கவுள்ள பெருந்தொகை மக்கள் – பொலிசார் தயார் நிலையில்! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 11:51 am
image

Advertisement

கொழும்பில் இன்று (20) பல போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் பொலிஸார் ஒருபோதும் தலையிட மாட்டார்கள் எனவும், ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராகவும் செயற்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதுதொடர்பான நடவடிக்கையை எடுக்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இன்று படையெடுக்கவுள்ள பெருந்தொகை மக்கள் – பொலிசார் தயார் நிலையில் SamugamMedia கொழும்பில் இன்று (20) பல போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.எவ்வாறாயினும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் பொலிஸார் ஒருபோதும் தலையிட மாட்டார்கள் எனவும், ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராகவும் செயற்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதுதொடர்பான நடவடிக்கையை எடுக்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement