• May 05 2024

கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த தடை விதித்த முக்கிய நாடு!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 12:05 pm
image

Advertisement

கடந்த 2021 ஆகஸ்ட்மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது தொடக்கம்  பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்திய வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்களை  பயன்படுத்துவது  தடை  செய்யப்பட்டுள்ளது.

“முஸ்லீம்களின் எண்ணிக்கையினை கட்டுக்குள் கொண்டு வரவே மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டதே  கருத்தடை சாதனங்கள்  ஆகவே  அவற்றை இனி  பெண்கள் பயன்படுத்த கூடாதெனவும்,  மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்பனை செய்யபடக்   கூடாதெனவும்  தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசித்து வரும் களச் செயல்பாட்டாளர் ஷப்னம் நஷ்மி  இந்த உத்தரவு பற்றி கூறுகையில்

“முன்னதாக பெண்கள் கல்லூரி செல்வதற்கும், வீட்டை விட்டு வெளியேறவும் தலிபான்கள் கட்டுப்பாடுகளை  விதித்தனர். தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகளைக்  கொண்டு வந்துள்ளனர்.  குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதும் கருத்தடை சாதனங்களைப்  பயன்படுத்துவதும் அடிப்படை உரிமையாகும். தற்போது அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது”. என கவலை வெளியிட்டுள்ளார்.

கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த தடை விதித்த முக்கிய நாடுSamugamMedia கடந்த 2021 ஆகஸ்ட்மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது தொடக்கம்  பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்திய வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்களை  பயன்படுத்துவது  தடை  செய்யப்பட்டுள்ளது. “முஸ்லீம்களின் எண்ணிக்கையினை கட்டுக்குள் கொண்டு வரவே மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டதே  கருத்தடை சாதனங்கள்  ஆகவே  அவற்றை இனி  பெண்கள் பயன்படுத்த கூடாதெனவும்,  மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்பனை செய்யபடக்   கூடாதெனவும்  தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.ஆப்கானில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசித்து வரும் களச் செயல்பாட்டாளர் ஷப்னம் நஷ்மி  இந்த உத்தரவு பற்றி கூறுகையில் “முன்னதாக பெண்கள் கல்லூரி செல்வதற்கும், வீட்டை விட்டு வெளியேறவும் தலிபான்கள் கட்டுப்பாடுகளை  விதித்தனர். தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகளைக்  கொண்டு வந்துள்ளனர்.  குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதும் கருத்தடை சாதனங்களைப்  பயன்படுத்துவதும் அடிப்படை உரிமையாகும். தற்போது அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது”. என கவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement