• Dec 11 2024

சீறிப் பாய்ந்த மோட்டார் சைக்கிள்-வாய்க்காலுக்குள் சென்ற இ.போ.ச பேருந்து...! அதிர்ச்சியடைந்த பயணிகள்...!

Sharmi / Jun 29th 2024, 10:10 am
image

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி  விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தானது பயணிகளுடன் நேற்றையதினம்(28) இரவு அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக, பேருந்தின் சாரதி சுதாகரித்து பேருந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், விபத்து இடம்பெற்ற அம்பாறை வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்திருந்த நிலையில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



சீறிப் பாய்ந்த மோட்டார் சைக்கிள்-வாய்க்காலுக்குள் சென்ற இ.போ.ச பேருந்து. அதிர்ச்சியடைந்த பயணிகள். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி  விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பேருந்தானது பயணிகளுடன் நேற்றையதினம்(28) இரவு அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக, பேருந்தின் சாரதி சுதாகரித்து பேருந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மேலும், விபத்து இடம்பெற்ற அம்பாறை வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்திருந்த நிலையில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement