திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தில் தற்காலிக குடிசையில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பத்தின் குடிசை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம்(12) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்காலிக குடிசை வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென குடிசையின் கூரையில் தீப்பிடித்தமையால் குறித்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் வீட்டு உடமைகள் முற்று முழுதாக தீ பற்றி எரிந்துள்ளதுடன், தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; நாசமான சொத்துக்கள். திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தில் தற்காலிக குடிசையில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பத்தின் குடிசை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.இச் சம்பவம் நேற்றையதினம்(12) மாலை இடம்பெற்றுள்ளது. தற்காலிக குடிசை வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென குடிசையின் கூரையில் தீப்பிடித்தமையால் குறித்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.மேலும் வீட்டு உடமைகள் முற்று முழுதாக தீ பற்றி எரிந்துள்ளதுடன், தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.