அம்பாறை, எரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபா நகர் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.
இச் சம்பவத்தில் எரகம 07, அரபா நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு திரும்பி இருந்தார்.
இலங்கை திரும்பிய அவர், விவாகரத்து பெற்றவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் இருந்த போது விவாகரத்து பெற்ற நபர் திடீரென கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.
குறித்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், திகவாபிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் திகவாபிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இளம் பெண் படுகொலை. அம்பாறை, எரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபா நகர் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.இச் சம்பவத்தில் எரகம 07, அரபா நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு திரும்பி இருந்தார்.இலங்கை திரும்பிய அவர், விவாகரத்து பெற்றவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்த வீட்டில் இருந்த போது விவாகரத்து பெற்ற நபர் திடீரென கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். குறித்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், திகவாபிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் திகவாபிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.