• Nov 24 2024

அப்துல்லா மஹரூபின் பதவிவிலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - றிஷாத்

Tharmini / Oct 16th 2024, 9:02 am
image

கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட தலைவராகவும் இருந்தஇஅப்துல்லா மஹரூபின் பதவிவிலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக கட்சி முன்னரைவிட, பலமாக இருக்கின்றது. இதனை வருகின்ற தேர்தல்முடிவு தெரியப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பத்துருத்தீன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரான சட்டத்தரணி ஹில்மி மஹாரூபை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை(15) கிண்ணியாவில் நடைபெற்றது.

இதன் போது, உங்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட தலைவராகவும் இருந்த அப்துல்லா மஹரூபின்  இராஜினாமா, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில், பிரதேச உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் தியாகத்தோடும் பணியாற்றுகின்றார்கள் . எனவே கட்சி முன்பு எப்போதும் இல்லாதவாறு, வெற்றி நடையோடு பயணிக்கின்றது என்று கூறினார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி அனுராகுமார திசநாயக்கவின் அரசாங்கத்தோடு சேர்ந்து பயணிப்பது தொடர்பான திட்டங்கள் ஏதாவது உண்டா? என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தேர்தலில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை எமது கட்சி சார்பில் தெரிவு செய்வதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு பெற்றுஇ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், அவர்களை தெரிவு செய்த  பிரதேச மக்களுக்கும்  நல்லது செய்வதற்காக காத்திருக்கின்றோம் என்று பதிலளித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில், ஏற்கனவே  பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த, இருவர் போட்டியிடுகின்ற போது, நீங்கள் உங்கள் கட்சி சார்பில் நிறுத்திருக்கின்ற வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்று  நினைக்கிறீர்களா? என மேலும் ஒரு ஊடகவியலாளர் கேட்டபோது, நிச்சயம் வெற்றி பெற முடியும். ஏனெனில் எமது வேட்பாளரான  ஹில்மி மஹரூப் ஒரு சிறந்த வேட்பாளர். நல்ல கல்விமான், அரசியல் ஆளுமை உடைய ஒரு சட்டத்தரணி என பல்துறை ஆளுமை கொண்டவர். அத்தோடு, இந்த மாவட்டத்தின்  தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் ஏகோபித்த தெரிவாக அவர் இருக்கின்றார்.மேலும் இந்த மாவட்டத்தில், தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன.அவற்றைத் தீர்த்துக் கொடுக்கக் கூடிய ஆளுமையும்  ஆற்றலும் அவரிடம் காணப்படுகின்றமையாலும் எங்களுடைய கட்சி சார்பில் அவரது  வெற்றி உறுதியாகிவிட்டது  என்று தெரிவித்தார். 

எங்களுடைய கட்சியும்  தலைமையும்தான்  அப்துல்லா மஹரூபை பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமன்றி, பிரதி அமைச்சராகவும் ஆக்கியதுகடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாசாவை  கட்சி ஆதரிக்கவேனண்டும் என்ற கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தை அப்துல்லா மஹரூப் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தத் தேர்தலில்தான் அமைதிகாக்க போகிறேன் எனக் கூறிக்கொண்டு கட்சி முன்னெடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான எந்த ஒரு பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை. இந்த நேரத்தில் மாவட்டத்தின் உடைய தலைமை பொறுப்பையும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொறுப்புகளையும்  டாக்டர் ஹில்மி  முஹைதீன்  பொறுப்பெடுத்து  செயல்பட்டார். 

இந்தப் பொதுத் தேர்தலிலும், மக்கள் ஐக்கிய சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை அப்துல்லா மஹரூப்  நிராகரித்தார்.  அத்தோடு, தான் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெரிவித்திருந்தார். இந்த நேரத்திலே, தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாதுள்ளது என டாக்டர் ஹில்மி முஹைதீன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மாவட்ட உயர்பீட  உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைமைகள்  கிண்ணியாவில் ஒன்று கூடி எடுத்த  ஏகோபித்த தீர்மானத்திற்கு இணங்க, சட்டத்தரணி  ஹில்மி முகைதீன் இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்  என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 





அப்துல்லா மஹரூபின் பதவிவிலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - றிஷாத் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட தலைவராகவும் இருந்தஇஅப்துல்லா மஹரூபின் பதவிவிலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக கட்சி முன்னரைவிட, பலமாக இருக்கின்றது. இதனை வருகின்ற தேர்தல்முடிவு தெரியப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பத்துருத்தீன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரான சட்டத்தரணி ஹில்மி மஹாரூபை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை(15) கிண்ணியாவில் நடைபெற்றது.இதன் போது, உங்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் திருகோணமலை மாவட்ட தலைவராகவும் இருந்த அப்துல்லா மஹரூபின்  இராஜினாமா, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில், பிரதேச உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் தியாகத்தோடும் பணியாற்றுகின்றார்கள் . எனவே கட்சி முன்பு எப்போதும் இல்லாதவாறு, வெற்றி நடையோடு பயணிக்கின்றது என்று கூறினார்.பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி அனுராகுமார திசநாயக்கவின் அரசாங்கத்தோடு சேர்ந்து பயணிப்பது தொடர்பான திட்டங்கள் ஏதாவது உண்டா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தேர்தலில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை எமது கட்சி சார்பில் தெரிவு செய்வதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு பெற்றுஇ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், அவர்களை தெரிவு செய்த  பிரதேச மக்களுக்கும்  நல்லது செய்வதற்காக காத்திருக்கின்றோம் என்று பதிலளித்தார்.திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில், ஏற்கனவே  பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த, இருவர் போட்டியிடுகின்ற போது, நீங்கள் உங்கள் கட்சி சார்பில் நிறுத்திருக்கின்ற வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்று  நினைக்கிறீர்களா என மேலும் ஒரு ஊடகவியலாளர் கேட்டபோது, நிச்சயம் வெற்றி பெற முடியும். ஏனெனில் எமது வேட்பாளரான  ஹில்மி மஹரூப் ஒரு சிறந்த வேட்பாளர். நல்ல கல்விமான், அரசியல் ஆளுமை உடைய ஒரு சட்டத்தரணி என பல்துறை ஆளுமை கொண்டவர். அத்தோடு, இந்த மாவட்டத்தின்  தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் ஏகோபித்த தெரிவாக அவர் இருக்கின்றார்.மேலும் இந்த மாவட்டத்தில், தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன.அவற்றைத் தீர்த்துக் கொடுக்கக் கூடிய ஆளுமையும்  ஆற்றலும் அவரிடம் காணப்படுகின்றமையாலும் எங்களுடைய கட்சி சார்பில் அவரது  வெற்றி உறுதியாகிவிட்டது  என்று தெரிவித்தார். எங்களுடைய கட்சியும்  தலைமையும்தான்  அப்துல்லா மஹரூபை பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமன்றி, பிரதி அமைச்சராகவும் ஆக்கியதுகடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாசாவை  கட்சி ஆதரிக்கவேனண்டும் என்ற கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தை அப்துல்லா மஹரூப் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தத் தேர்தலில்தான் அமைதிகாக்க போகிறேன் எனக் கூறிக்கொண்டு கட்சி முன்னெடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான எந்த ஒரு பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை. இந்த நேரத்தில் மாவட்டத்தின் உடைய தலைமை பொறுப்பையும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொறுப்புகளையும்  டாக்டர் ஹில்மி  முஹைதீன்  பொறுப்பெடுத்து  செயல்பட்டார். இந்தப் பொதுத் தேர்தலிலும், மக்கள் ஐக்கிய சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை அப்துல்லா மஹரூப்  நிராகரித்தார்.  அத்தோடு, தான் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெரிவித்திருந்தார். இந்த நேரத்திலே, தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாதுள்ளது என டாக்டர் ஹில்மி முஹைதீன் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மாவட்ட உயர்பீட  உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைமைகள்  கிண்ணியாவில் ஒன்று கூடி எடுத்த  ஏகோபித்த தீர்மானத்திற்கு இணங்க, சட்டத்தரணி  ஹில்மி முகைதீன் இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்  என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement