• May 06 2024

பிறந்தநாளில் அதிரடி..! வெளியானது விஜயின் லியோ பட போஸ்டர்..!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 10:16 am
image

Advertisement

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு திரைப்படத்தின் முதல் போஸ்டரை  வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் லியோ. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மிஷ்கின் என பிரபல சினிமா நட்சத்திரங்கள் உடன் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இன்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.

அதில் விஜய் கையில் பெரிய சுத்தியலுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஓநாய் படைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

குறித்த லியோ திரைப்படத்தின்  போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும், இன்று 49 வது பிறந்தநாள் காணும் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் தமது  வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களினூடாக தெரிவித்து வருகின்றனர்.




பிறந்தநாளில் அதிரடி. வெளியானது விஜயின் லியோ பட போஸ்டர்.samugammedia தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு திரைப்படத்தின் முதல் போஸ்டரை  வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் லியோ. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மிஷ்கின் என பிரபல சினிமா நட்சத்திரங்கள் உடன் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.இன்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கையில் பெரிய சுத்தியலுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஓநாய் படைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.குறித்த லியோ திரைப்படத்தின்  போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.மேலும், இன்று 49 வது பிறந்தநாள் காணும் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் தமது  வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களினூடாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement