• May 04 2024

மேலும் ஒரு இந்திய இருமல் மருந்தில் நச்சு அபாயம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! samugammedia

Chithra / Apr 27th 2023, 2:50 pm
image

Advertisement

மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் அசுத்தமான இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகளின் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாபை தளமாகக் கொண்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தின் Guaifenesin TG சிரப் மருந்தின் மாதிரிகளை  பரிசோதித்த பொழுது “ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் காணப்பட்டதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த இரு கலவைகளும் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதுடன உயிராபத்துக்களையும்  விளைவிக்கும். 

அத்துடன் இந்த மருந்தினால் யாரேனும் சுகவீனமுற்றார்களா என்பது பற்றி அந்த அமைப்பு எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேறு சில இருமல் மருந்துகளால் காம்பியா மற்றும் உஸ்பகிஸ்தானில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து சில மாதங்களிலேயே இந்த புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

வளர்ந்துவரும் நாடுகளின் மருந்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்  உலகின் மிகப்பெரிய பொது மருந்து உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கின்றது. 

எனினும் பல இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம் பற்றி அண்மைக்காலத்தில் விமர்சனங்கள் அதிகமாகவே வலம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் ஒரு இந்திய இருமல் மருந்தில் நச்சு அபாயம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை samugammedia மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் அசுத்தமான இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகளின் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.பஞ்சாபை தளமாகக் கொண்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தின் Guaifenesin TG சிரப் மருந்தின் மாதிரிகளை  பரிசோதித்த பொழுது “ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் காணப்பட்டதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த இரு கலவைகளும் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதுடன உயிராபத்துக்களையும்  விளைவிக்கும். அத்துடன் இந்த மருந்தினால் யாரேனும் சுகவீனமுற்றார்களா என்பது பற்றி அந்த அமைப்பு எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேறு சில இருமல் மருந்துகளால் காம்பியா மற்றும் உஸ்பகிஸ்தானில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து சில மாதங்களிலேயே இந்த புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வளர்ந்துவரும் நாடுகளின் மருந்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்  உலகின் மிகப்பெரிய பொது மருந்து உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கின்றது. எனினும் பல இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம் பற்றி அண்மைக்காலத்தில் விமர்சனங்கள் அதிகமாகவே வலம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement