• May 18 2024

அனுரவின் கருத்து கேட்க நன்றாக இருக்கு: ஆனால் நடைமுறை சாத்தியமற்றது-பிரதி சபாநாயகர் கருத்து!SamugamMedia

Sharmi / Feb 27th 2023, 10:49 am
image

Advertisement

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஜித் ராஜபக்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரவின் பேச்சுக்களை கேட்பதற்கு அருமையாக இருப்பதாகவும் ஆனால், அவை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அஜித் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தபோது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் சவால்களை ஏற்க முன்வரவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்ற காரணத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவதாக அஜித் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

அனுரவின் கருத்து கேட்க நன்றாக இருக்கு: ஆனால் நடைமுறை சாத்தியமற்றது-பிரதி சபாநாயகர் கருத்துSamugamMedia இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஜித் ராஜபக்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரவின் பேச்சுக்களை கேட்பதற்கு அருமையாக இருப்பதாகவும் ஆனால், அவை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அஜித் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தபோது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் சவால்களை ஏற்க முன்வரவில்லை.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்ற காரணத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவதாக அஜித் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement