கிழக்கு மாகாண சபையின் பணியகங்கள் மற்றும் அதிகாரசபைகளுக்கான தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்து, நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (05) வழங்கிவைத்தார்.
மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக ஜி.சுகுமாறன், மாகாண சுற்றுலா பணியக தலைவராக எம்.ஜி.பிரியந்த மலவனகே, மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக ரஜினி கணேசபிள்ளை, மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவராக கித்சிறி நவரத்ன மற்றும் மாகாண முன்பள்ளி கல்வி பணியக தலைவராக அ.விஜயானந்தமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனங்களின் புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், சுதந்திரமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்றும் அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள பணியகங்கள் மற்றும் அதிகார சபைகளுக்கான தலைவர்கள் நியமனம் கிழக்கு மாகாண சபையின் பணியகங்கள் மற்றும் அதிகாரசபைகளுக்கான தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்து, நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (05) வழங்கிவைத்தார்.மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக ஜி.சுகுமாறன், மாகாண சுற்றுலா பணியக தலைவராக எம்.ஜி.பிரியந்த மலவனகே, மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக ரஜினி கணேசபிள்ளை, மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவராக கித்சிறி நவரத்ன மற்றும் மாகாண முன்பள்ளி கல்வி பணியக தலைவராக அ.விஜயானந்தமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிறுவனங்களின் புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், சுதந்திரமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்றும் அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.