• May 09 2025

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் புதிய அளவையாளர் நாயகம் நியமனம்

Chithra / May 8th 2025, 1:31 pm
image

 

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் கடந்த 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில், வெற்றிடமாகவுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை புதிய அளவையாளர் நாயகமாக வை.ஜீ.ஞானதிலக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைய அமைச்சரவை இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் புதிய அளவையாளர் நாயகம் நியமனம்  புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் கடந்த 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.இந்தநிலையில், வெற்றிடமாகவுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை புதிய அளவையாளர் நாயகமாக வை.ஜீ.ஞானதிலக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைய அமைச்சரவை இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement