• Dec 18 2025

அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்களுக்கு ஆபத்தா? - வெளியான தகவல்

Chithra / Dec 15th 2025, 2:06 pm
image


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.


அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து வருவதாகவும், தகவல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் நேற்று மாலை யூதர்களின் நிகழ்வு ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர். 


இந்த துப்பாக்கிச் சூட்டை  இருவர் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிதாரி என கூறப்படும் இவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.


அதில் 'சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறது. 


அவுஸ்திரேலிய மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒற்றுமையுடன் உடன் நிற்கிறது. என தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்களுக்கு ஆபத்தா - வெளியான தகவல் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து வருவதாகவும், தகவல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் நேற்று மாலை யூதர்களின் நிகழ்வு ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை  இருவர் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிதாரி என கூறப்படும் இவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.அதில் 'சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறது. அவுஸ்திரேலிய மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒற்றுமையுடன் உடன் நிற்கிறது. என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement